)
Bhopal Kids Affected By Diwali Gun :மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியை பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலருக்கு தோலிலும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
கடந்த 20-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு தீபாவளிக்கும் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புதிய ரக தீபாவளி துப்பாக்கி ஒன்று உள்ளூர் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ரசாயனத்தை தண்ணீருடன் கலக்கும்போது பெரும் வெடி சத்தத்துடன் அசிட்டிலின் என்ற வாயு வெளியாகிறது. இந்நிலையில், இந்த புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு கண் பார்வையே பறிபோனதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் போபால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசிட்டிலின் வாயுவை சுவாசிக்கும்போது தலைவலி, கண் எரிச்சல் மற்றும் நியாபக மறதி உள்ளிட்ட ஆபத்தான விளைவுகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். போபாலில் விற்பனை செய்யப்பட்டது சாதாரண பட்டாசு அல்ல, அது ஒரு ரசாயன வெடிகுண்டு என்று போபால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பட்டாசு விற்பனை சந்தைகளில் அதிரடி சோதனை நடத்தி, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இப்படி தீபாவளிக்கு வந்த புதிய ரக துப்பாக்கிகளால் குழந்தைகளின் கண் பார்வை பறிபோன சம்பவம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ