)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜீடிமெட்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஜுலராமரம் பகுதியில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர் ரெட்டி மற்றும் தேஜா (35) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், தாய் தேஜா நேற்று (ஏப்ரல் 17) மாலை இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாலை 4 மணி அளவில் சம்பவம் நடைபெற்ற நிலையில்,. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தாய் தேஜா மற்றும் மூத்த மகன் ஹர்ஷித் ரெட்டி (11) சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்த நிலையில், இளைய மகன் ஆஷிஷ் ரெட்டி (9) உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், சம்பவ இடத்தில் தேஜா எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், தனது கணவர் வெங்கடேஷ்வர ரெட்டி உடன் தனக்கு தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தேஜாவிற்கு கண் தொடர்பான பிரச்சனைகளும் குழந்தைகள் இருவருக்கும் உடல்நிலை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் இருந்த உளவியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளே இந்த சம்பவத்திற்கு காரணமாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
தொடர்ந்து தேஜா தன்னையும் தனது குழந்தைகளையும் மாய்த்துக்கொள்ளும் முடிவிற்கு எப்படி வந்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இரண்டு குழந்தைகளை தாய் கழுத்தறுத்து கொன்றுவிட்டும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ