close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

கிரிக்கெட் களத்தை தொடர்ந்து அரசியல் களத்தில் இறங்கும் தல தோனி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எம்.எஸ் தோனி அரசியலில் நுழையக்கூடும் என்று பாஜக தலைவர் சஞ்சய் பாஸ்வான் குறிப்பிட்டுள்ளார்!!

Updated: Jul 13, 2019, 11:01 AM IST
கிரிக்கெட் களத்தை தொடர்ந்து அரசியல் களத்தில் இறங்கும் தல தோனி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எம்.எஸ் தோனி அரசியலில் நுழையக்கூடும் என்று பாஜக தலைவர் சஞ்சய் பாஸ்வான் குறிப்பிட்டுள்ளார்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஓய்வு பெறுவார் என நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. 

இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்து அணியிடம் வெற்றியை இழந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை எடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நாட்டிற்காக ஏராளமான பரிசுகளை கொண்டுவந்த இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில் நுழையக்கூடும் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனமான  IANS-யிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சஞ்சய் பாஸ்வான் கூறுகையில்; MS தோனி 'நரேந்திர மோடி அணியின்' ஒரு பகுதியாக அரசியலில் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி காவிநிற கட்சியில் சேரலாம் என்றும், இந்த விவகாரம் குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருவதாகவும் பாஸ்வான் தெரிவித்துள்ளார். "இந்த பிரச்சினையில், நீண்ட காலமாக ஒரு விவாதம் நடந்து வருகிறது, இருப்பினும் அவர் ஓய்வு பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

உலகப் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுடனான தனது சமன்பாட்டில், சஞ்சய் பாஸ்வான் அவரை நீண்ட காலமாக அறிந்திருப்பதாகவும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு காவிநிற கட்சியில் சேருவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார். "தோனி எனது நண்பர், அவர் உலகப் புகழ் பெற்ற வீரர், அவரை கட்சி மடிக்குள் கொண்டுவருவது குறித்து நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளியான பின்னரே இறுதி முடிவு என்ன என்று தெரியும் என்றும் சஞ்சய் பஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.