)
Mumbai Rain Viral Video: மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை கடந்த சில நாள்களாகவே கனமழையால் திக்குமுக்காடி வருகிறது. மழை வெள்ளத்தால் மும்பை நகரமே ஸ்தம்பித்துவிட்டது. பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மும்பை நகரிலும், அதனைச் சுற்றுவட்டராப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. பள்ளிகளும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மும்பையில் இதுபோல் தொடர் கனமழை பெய்வது வழக்கமாகிவிட்டது. சாலையெங்கும் மழைநீர் தேங்குவது, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவது, இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டுத்தள்ளுவது ஆகியவையும் மழைக்காலத்தில் வழக்கமாகிவிட்டது.
இந்தியாவிலேயே வீடு, நிலம் ஆகியவற்றின் விலை மும்பையில்தான் மிக மிக அதிகம் எனலாம். அந்த வகையில், கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிப்பது பொதுமக்களால் பெரிதும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகிறது. மும்பைவாசிகள் தங்களின் ஆற்றாமையையும், விமர்சனங்களையும் தொடர்ந்து மீம்ஸ் மூலம் இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் X தள பயனர் மழை நீர் தேங்கியிருக்கும் பகுதி ஒன்றின் வீடியோ பதிவிட்டு அதில், "இதுதான் தெற்கு மும்பை - பிரபாதேவி, இங்கு ஒரு வீட்டின் வாங்க ரூ.15 கோடி - ரூ.20 கோடி வைத்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். அதாவது அதிக விலைமதிப்பான வீடுகள், குடியிருப்புகள் இருக்கும் பகுதியை கூட மழை வெள்ளம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
This is South Mumbai- Prabhadevi where you buy 15-20 crores of Flat#MumbaiRains doesn't care pic.twitter.com/7a9D5zKbKx
— Mumbai Nowcast (@s_r_khandelwal) August 18, 2025
மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள வீரா தேசாய் சாலையில் விலைப்மதிப்பான மெர்சிடெஸ் கார், மழை வெள்ளத்தில் சிக்கி மிதக்கும் வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன. மழைநீர் தேங்கியிருப்பதால் அந்தேரி சுரங்கப்பாதையும் மூடப்பட்டிருக்கிறது.
#WATCH | Maharashtra: Severe waterlogging witnessed in Mumbai as the region receives heavy rainfall; visuals from Veera Desai Road, Andheri West pic.twitter.com/IMWfQsNLBo
— ANI (@ANI) August 18, 2025
மகாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்காட் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, புறநகர் சாண்டாகுரூஸ் நிலையத்தில் 99 மிமீ மழை பதிவாகி உள்ளது. மேலும், கொலாபா கடலோர ஆய்வகத்தில் 38 மிமீ மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ