Tahawwur Rana: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டம்!

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 9, 2025, 07:14 PM IST
  • கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது
  • அதற்கு மூளையாக தஹாவூர் ராணா செயல்பட்டார்
  • அவர் தற்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளார்
Tahawwur Rana: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டம்!

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் இந்திய பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாப் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தூக்கிலிடப்பட்டார். இந்த தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source

மத்திய அரசு வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, "இந்தியாவில் இருந்து அரசு விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் குழு, அமெரிக்காவுக்குச் சென்று, ராணாவை அழைத்து வர அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து அனைத்துவிதமான சட்டரீதியான பணிகளையும் முடித்துவிட்டன. ஆதலால், ராணாவை இந்தியாவுக்கு மிகவிரைவாக அழைத்து வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன. இது எப்போது என உறுதியாகக் கூறமுடியாது" எனத் தெரிவிக்கின்றன. 

இச்சூழலில், தஹாவூர் ராணா தன்னை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறுத்து, ராணாவை இந்திய அதிகாரகளிடம் ஒப்படைத்து விசாரணையை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டது.

64 வயதான தஹாவூர் ராணா, தற்போது லாஞ் ஏஞ்செல்ஸில் உள்ள சிறையில் இருக்கிறார். அங்கிருந்தவாரே கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றத்தில் மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தடை கோரி இருந்தார். 

அந்த மனுவில், தனக்கு பல்வேறு விதமான உடல்நல குறைபாடுகள் இருப்பதாகவும், இந்தியாவுக்குச் சென்றால் மரண தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவி்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த 2024 ஜூலை மாதம் மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி, தனக்கு உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் இருப்பதாகவும், இதயநோய், பார்க்கின்சன் நோய், ரத்த புற்றுநோய், சிறுநீரக கோளாரு, ஆஸ்துமா என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி இருந்தார்.

மேலும், இந்திய அதிகாரிகளிடம் நான் ஒப்படைக்கப்பட்டால் தன்னை கொடுமைப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஏனென்றால் நான் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் என்பதால் இந்தக் கொடுமைகள் நடக்கலாம் என அச்சம் தெரிவித்திருந்தார். 

ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் ராணாவின் மனுவை நிராகரித்து, அவரை இந்தியாவில் சென்று விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டது. பாகிஸ்தானை பூர்வீமாகக் கொண்ட தஹாவூர் ராணா கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர். பாகிஸ்தான் அமெரிக்க குடியுரிமை பெற்ற டேவிட் கோல்மென் ஹெட்லியுடன் நெருக்கமாக ராணா இருந்தார். 

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து ராணாவை நாடு கடத்தும் விஷயத்தை வலியுறுத்தி உள்ளார். அதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொடுமைக்கார ராணா, இந்தியாவுக்கு சென்று நீதிவிசாரணையை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: வருங்கால மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்! திருமண நாளில் திடீர் திருப்பம்-வைரல் செய்தி..

மேலும் படிங்க: ரூ.15000 கோடி வீட்டை காலி செய்யும் ஆனந்த் அம்பானி? கடைசியில் இப்படியொரு நிலையா!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News