Mysore Sandal Soap: கர்நாடாகவின் ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மைசூர் சான்டல் சோப் மாறிவிட்டது எனலாம். கடந்த 109 ஆண்டுகளாக இந்த மைசூர் சான்டல் சோப் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களின் குளியல் சோப்பாக மைசூர் சான்டல் சோப்பையே பயன்படுத்தி வருகின்றனர். நிச்சயம் உங்கள் குடும்பத்தினரில் ஒருவர் மைசூர் சான்டல் சோப்பை பயன்படுத்தி நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.
Mysore Sandal Soap: சர்ச்சையால் வந்த லாபம்
அந்த வகையில், கடந்த மே மாதம் மைசூர் சான்டல் சோப்பை தயாரிக்கும் நிறுவனத்திற்கு கன்னட அமைப்புகள் சார்பாக கடும் கண்டனங்கள் எழுந்தன. தற்போது மைசூர் சான்டல் சோப்பை கர்நாடக மாநில அரசின் கீழ் உள்ள கர்நாடக சோப்ஸ் மற்றும் டிடெர்ஜென்ட்ஸ் லிமிடெட் (Karnataka Soaps & Detergents limited - KS&DL) நிறுவனம் தயாரித்து வருகிறது.
மைசூர் சான்டல் சோப்பிற்கு பிராண்ட் அம்பாஸிடராக நடிகை தமன்னாவே உள்ளார், அதற்குதான் கன்னட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு பதில் கர்நாடகாவை சேர்ந்த பிரபலத்தை பிராண்ட் அம்பாஸிடாரக நியமிக்க வேண்டும் என எதிர்ப்பு குரல் கிளம்பின. ஆனால், இந்த பிரச்னை மைசூர் சான்டல் சோப் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை ஈட்டி தந்துள்ளது எனலாம்.
Mysore Sandal Soap: மே மாதத்தில் உயர்ந்த லாபம்
ஆம், கடந்த மே மாதத்தின் இடையேதான் இந்த சர்ச்சை கிளம்பியது. அந்த மே மாதத்தில்தான் மைசூர் சான்டல் சோப் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. அந்த நிறுவனம் மே மாதத்தில் ரூ.150 கோடியை விற்பன இலக்காக நிர்ணயித்திருந்தது. ஆனால், இந்த சர்ச்சையால் 24% விற்பனை உயர்ந்தது. அதாவது, மே மாதத்தில் மட்டும் மைசூர் சான்டல் சோப்பை தயாரிக்கும் நிறுவனம் ரூ.186 கோடி வருமானம் ஈட்டியது.
Mysore Sandal Soap: பல மடங்கு உயர்ந்த வருமானமும், லாபமும்...
கடந்த சில ஆண்டுகளாகவே மைசூர் சான்டல் சோப் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. 2020-21 நிதியாண்டில் ரூ.890 கோடியளவில் வருமானம் ஈட்டிய இந்த நிறுவனம் 2024-25 நிதியாண்டில் ரூ.1,780 கோடியை அளவில் தனது வருமானத்தை நான்காண்டுகளில் இரட்டிப்பாக்கி உள்ளது.
அதே நேரத்தில், 2020-21 நிதியாண்டில் அந்த நிறுவனத்திற்கு நிகர லாபம் ரூ.113 கோடியாகும், அதே 2024-25 நிதியாண்டில் லாபம் ரூ.415 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது நான்கு மடங்கு லாபம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தளவிற்கு வருமானம் உயர்ந்ததற்கு அதிகளவு தயாரிப்பு மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங்தான் காரணம் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரஷாந்த் தெரிவித்தார்.
Mysore Sandal Soap: ரூ.5000 கோடி இலக்கு
மைசூர் சான்டல் சோப்பின் KS&DL நிறுவன விற்பனையில் 80% தென்னிந்தியாவில் இருந்தே வருகிறது. ஆந்திர பிரேசம்தான் அதன் மிகப்பெரிய சந்தை எனலாம். தற்போது அதனை நாடு முழுக்க எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, பான் இந்தியன் நடிகையான தமன்னாவை பிராண்ட் அம்பாஸிடராக அந்நிறுவனம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
2028ஆம் ஆண்டுக்குள் கர்நாடக சோப்ஸ் மற்றும் டிடெர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது. வடக்கு கர்நாடகாவில் உள்ள விஜயபுராவில் ஒரு புதிய ஆலையில் ரூ.250 கோடி முதலீடு செய்து, புதிய தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
"எதிர்காலத்தில் நாங்கள் அதை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கூட (மைசூர் சான்டல் சோப்பை) எடுத்துச் செல்வோம். அப்போது எங்களுக்கு ஒரு ஹாலிவுட் பிரபலம் கூட தேவைப்படலாம்" என்று கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல் நகைச்சுவையாக கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,500 உதவித் தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









