இரவில் நிர்வாணமாக வந்து வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண் - திகில் சம்பவம்!

UP Naked Woman Viral Video: கடும் குளிரான இரவில் இளம்பெண் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2023, 11:19 AM IST
  • அந்த பெண்ணை யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
  • அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இரவில் நிர்வாணமாக வந்து வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண் - திகில் சம்பவம்!

UP Naked Woman Viral Video: உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரியும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நிர்வாண பெண்ணின் சிசிடிவி வீடியோ வைரலாகி, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டாலும், போலீசார் இன்னும் அந்த பெண்ணைக் கண்டுபிடிக்கவில்லை.

கடந்த ஜன. 29ஆம் தேதி அன்று இரவு நிர்வாணமான நிலையில், அந்த பெண் யாரோ ஒருவரின் கதவைத் தட்டியதாகக் கூறப்படும் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, ஜன. 31ஆம் தேதி, உத்தர பிரதேசத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண்ணையும் அவர் எங்கிருக்கிறார் என்பதையும் போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை.

புகார் அளித்த உள்ளூர்வாசி கூறுகையில், அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும், புகார்தாரரின் வீட்டு வாசலில் இருந்து வெளியேறியபோது, அந்தப் பெண்ணை இரண்டு பைக்கில் வந்தவர்கள் சிலர் பின்தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து உலக வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ள இந்தியா!

தீவிர விசாரணை 

இதுகுறித்து ராம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின் நோக்கத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை என்றும் மேலும் இதுகுறித்த விவரங்களை சேகரிக்க அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் முன்பு கூறியிருந்தனர். மேலும் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த பெண்ணை எங்காவது கண்டால், அந்த பெண்ணை குறித்த தகவலை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 

சமூக வலைதளங்களில் இந்த வைரல் வீடியோ குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த வீடியோவால் பெண்ணின் இருப்பிடம் குறித்து தீவிர கவலை தெரிவித்தாலும், சிலர் அவர் மனநிலை சரியில்லாமல் இருக்கலாம் என்றும் கூறினர். அந்த பெண்ணை கண்டுபிடிக்காததால் சிலர் போலீசாரை குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குளிரிலும் அந்த பெண் நிர்வாணமாக நடப்பது அவளுக்கு வேதனையாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். இங்கு அந்த பெண்ணின் நலன் கருதி, அந்த நிர்வாண வீடியோ இணைக்கப்படவில்லை.

மேலும் படிக்க | 10ம் வகுப்பு தேர்வு இனி கிடையாது... வைரலாக பரவும் செய்தி! உண்மை என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News