பால் விலை உயர்வு... ஏப். 1 முதல் லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரிக்கும்... மக்கள் அதிர்ச்சி!

Milk Price Hike: விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து பால் ஒரு லிட்டருக்கும், தயிர் ஒரு கிலோவுக்கும் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக நந்தினி நிறுவனம் அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 27, 2025, 10:34 PM IST
  • நந்தினி நிறுவனம் கர்நாடகாவில் இயங்கி வருகிறது.
  • தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நந்தினி பால் விற்பனையில் உள்ளது.
  • கடந்தாண்டு ஜூலை மாதமும் பால் விலை அங்கு உயர்த்தப்பட்டது.
பால் விலை உயர்வு... ஏப். 1 முதல் லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரிக்கும்... மக்கள் அதிர்ச்சி!

Milk Price Hike: தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தை போன்ற கர்நாடகாவில் நந்தினி நிறுழனம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகா முழுவதும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை தயாரித்து, அதனை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தில் 2025ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போது பால் விலையை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Add Zee News as a Preferred Source

Milk Price Hike: பால், தயிர் விலை உயர்வு...

நந்தினி பால் விலை ஏற்றத்திற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மூலம் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்கிறது என கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஎன் ராஜண்ணா இன்று தெரிவித்துள்ளார். பால் மட்டுமின்றி தயிரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ தயிரின் விலை 4 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Milk Price Hike: கடந்தாண்டும் விலை உயர்வு

அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட விலையை உயர்த்த வேண்டும் என கர்நாடாக பால் கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதாவது, பால் விலையை 5 ரூபாய்க்கு அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், கர்நாடக அரசு பால் விலையை 4 ரூபாய் அதிகரித்துள்ளது. இதுபோல் கடந்தாண்டு ஜூலை மாதம் பால் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. ஒவ்வொரு பாக்கெட்டுகளிலும் 50 மல்லி அளவு உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி...! எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரலாம்... என்ன காரணம்?

Milk Price Hike: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை...

கர்நாடகா கால்நடைத்துறை அமைச்சர் கே வெங்கடேஷ் கூறுகையில்,"முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், நந்தினி பால் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் விலையில் கிலோவுக்கு 4 ரூபாயும் உயர்த்த ஒப்புதல் வழங்கபட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலுக்கான செலவைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்பட்ட நிலையில், அந்த தொகை மாநிலத்தின் பால் உற்பத்தியாளர்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய வழிமுறைகள் எடுக்கப்படும். கூடுதலாக, 2024ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட 1 லிட்டர் நந்தினி பாலுக்கு ரூ.2 விலை உயர்வைத் திரும்பப் பெறப்படுகிறது. அதற்கு முந்தைய நிலையை போலவே 500 மில்லி மற்றும் 1 லிட்டர் பாக்கெட்டுகளில் ரூ.4 என்ற தற்போதைய விலை திருத்தத்தை  ஏற்றுக்கொண்டு விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

Milk Price Hike: ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.48

பால் விலையை உயர்த்தக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கர்நாடக ராஜ்ய ரைத்த சங்கமும், பசுமைப் படையும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் 50 ரூபாயாக உயர்த்த வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனர். 
மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தும் வரை லிட்டருக்கு 10 ரூபாய் இடைக்கால ஆதரவு விலையை நிர்ணயிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றத்தின் மூலம், நந்தினி நிறுவனத்தின் பிரபலமான ஒரு லிட்டர் நீல நிற பாக்கெட்டின் விலை 44 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நந்தினி பால் பாக்கெட் தமிழ்நாட்டிலும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Patanjali Yoga: லட்சக்கணக்கானோர் பதஞ்சலி யோகாவை நோக்கி வருவது ஏன்...?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News