உலக வங்கியின் பணத்தை மோசடி செய்து... ஆட்சியைப் பிடித்த NDA - பரபரப்பு குற்றச்சாட்டு!

Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு உலக வங்கி ஒதுக்கிய நிதியில் இருந்து ரூ.14 கோடியை மடைமாற்றி பெண்களுக்கு ரூ.10 ஆயிரத்தை நிதிஷ் குமார் அரசு வழங்கியதாக ஜன் சுராஜ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2025, 12:20 PM IST
  • மொத்தம் 243 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
  • NDA கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி.
  • மகா கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் வெற்றி.
உலக வங்கியின் பணத்தை மோசடி செய்து... ஆட்சியைப் பிடித்த NDA - பரபரப்பு குற்றச்சாட்டு!

Bihar Assembly Election 2025: மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 14) நடத்தப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசியளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது.

Add Zee News as a Preferred Source

மீண்டும் ஆட்சிக் கட்டிலில் NDA

பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் 202 தொகுதிகளை வென்று ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. மீண்டும் நிதிஷ் குமார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வென்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவது இது இரண்டாவது முறையாகும், கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 206 தொகுதிகளை வென்றிருந்தது. 

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி மொத்தமே 35 இடங்களில்தான் வென்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்கிரஸ் 6 தொகுதிகளை கைப்பற்றின. சிபிஎம்எல் 2 தொகுதிகள், IIP மற்றும் சிபிஐ தலா 1 தொகுதியை வென்றன. தனித்து நின்ற அசாதுதீன் ஓவைஸியின் AIMIM கட்சி 5 இடங்களையும், பகுஜன் சமாஜ் 1 இடத்தையும் வென்றன.

பிரசாந்த் கிஷோரின் தாக்கம் 

இந்நிலையில், வேறு எந்த கட்சியும் போட்டியிடாத அளவிற்கு, அதாவது 238 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி. பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கடந்தாண்டு அக்டோபரில் இக்கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கியதும் பீகார் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளுக்கு பிரசாந்த் கிஷோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ச்சியாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். ஆனால் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. அக்கட்சி அரசுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களின் வாக்குகளை பிரித்தது என கூறப்படுகிறது. மேலும் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடாதது பெரியளவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

உலக வங்கி நிதியில் மோசடி

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான சூழலில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரும், முன்னணி தலைவருமான பவன் வர்மா, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஊழல் செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. அதாவது, உலக வங்கியில் இருந்து வேறு சில திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மத்திய அரசு பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்காக திருப்பிவிட்டு, மாநிலத்தில் உள்ள பெண் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். 

பெண்களுக்கு ரூ.10 ஆயிரம்

பீகார் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முக்கிய மந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் சுமார் 1.25 கோடி மகளிரின் வங்கிக் கணக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கப்பட்டதை விமர்சிக்கும் வகையில் பவன் வர்மா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "பீகாரில் பொதுக்கடன் தற்போது ரூ. 4 லட்சத்து 6 ஆயிரம் கோடியாக உள்ளது. ஒரு நாளைக்கு வட்டி ரூ.63 கோடி. கருவூலமே காலியாக இருக்கிறது.

ரூ.14 ஆயிரம் கோடி மடை மாற்றப்பட்டது

எங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பது தவறாக இருக்கலாம், மேலும் மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 10,000 தொகை, உலக வங்கியில் இருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ. 21,000 கோடியில் இருந்து மடை மாற்றப்பட்டது என்பதும் தவறாக இருக்கலாம். தேர்தலுக்கான ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ. 14 ஆயிரம் கோடி எடுக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தேர்தலுக்கு பின் விளக்கம் வரலாம்

நான் சொன்னது போல், இது எங்களுக்கு கிடைத்த தகவல். அது தவறாக இருக்கும்பட்சத்தில், நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அது உண்மையாக இருந்தால், இது எந்த அளவிற்கு சரியானது என்ற கேள்வி எழுகிறது. சட்டப்படி, நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம். அரசு நிதியை திருப்பிவிட்டுக்கொண்டு, அதன் பின்னர் அதற்கான விளக்கங்களை வழங்க முடியும். தேர்தலுக்குப் பிறகு விளக்கம் வரலாம். மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் பிற பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. நீங்கள் வாக்குறுதிகளை வழங்குகிறீர்கள், இன்னொரு கட்சி பணம் கொடுக்கிறது. அது வாக்காளர்கள் வேறு வகையில் தாக்கம் செலுத்தும்.

2.5 பெண்கள் ரூ.10 ஆயிரம் வாங்கவில்லை

பீகாரில் நான்கு கோடி பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். இன்னும் 2.5 கோடி பேர் அந்த தொகையை (ரூ.10 ஆயிரம்) வாங்கவில்லை. ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால், தங்களுக்கு அந்த ரூ.10 ஆயிரம் கிடைக்காது என மற்ற பெண்கள் நினைத்திருக்கலாம். புதிய கட்சியாக எங்கள் லட்சியங்கள் மிகையாக இருந்தன, ஆனால் எங்கள் செய்தி சரியானது, அதற்கான பதிலும் நன்றாக இருந்தது. பிரதமர் மோடியே இலவசங்களை வழங்குவதை விமர்சித்திருந்தார். ஒருவேளை அவர் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குறிப்பிட்டு அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்போது பீகாரில் என்ன நடந்தது?" என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | பீகார் தேர்தல் முடிவு: புதிய முதலமைச்சர் யார்? பாஜக-வின் கணக்கு! நிதீஷ் எக்ஸிட் கன்பார்ம்

மேலும் படிக்க | SIR செய்த சித்து விளையாட்டு; தமிழ்நாட்டில் இதை நடக்க விடமாட்டோம் - அகிலேஷ் சொல்வது என்ன?

மேலும் படிக்க | தேஜஸ்வி முதல்வர் கனவில்... மண்ணள்ளி போட்ட PK - மகா கூட்டணிக்கு பெரிய ஆப்பா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News