NEET PG 2025 Postponed: வரும் ஜூன் 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கபடுவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அடுத்து தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEET PG 2025 Postponed: ஒரே ஷிப்டாக நடைபெறும் தேர்வு
நீட் முதுகலை தேர்வை இரண்டு ஷிப்டாக நடத்துவதற்கு பதில் ஒரே ஷிப்டாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை அடுத்து, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் இன்று (ஜூன் 2) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "நீட் முதுகலை தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்படும். ஒரே ஷிப்ட் தேர்வுக்கு அதிக தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதால் 2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை தேர்வின் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
NEET PG 2025 Postponed: நீட் முதுகலை தேர்வு நடத்தப்படுவது ஏன்?
நீட் முதுகலை தேர்வு என்பது இந்தியாவில் முதுகலை மருத்துவப் படிப்புகளை பயில விரும்பும் மருத்துவ பட்டதாரிகளுக்கான ஒரு தகுதி தேர்வாகும். தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியமே இந்த நீட் முதுகலை தேர்வை நிர்வகித்து, அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறது. நீட் முதுகலை தேர்வு நாடு முழுவதும் MD, MS, PG டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக அமைகிறது.
NEET PG 2025 Postponed: நகரச் சீட்டு வழங்குவதும் ஒத்திவைப்பு
2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், நீட் தேர்வு நகரச் சீட்டை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் இன்று வெளியிட இருந்தது. ஆனால், தற்போது தேர்வே தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் நகரச் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் நகரச் சீட்டு விநியோகிக்கப்படும் தேதி, அனுமதி அட்டை வழங்கப்படும் தேதி, தேர்வு தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படலாம்.
NEET PG 2025 Postponed: தேர்வுக்கு பின் கலந்தாய்வு
இவை அறிவிக்கப்பட்ட உடன் மாணவர்கள் அவர்களுக்கான ஹால் டிக்கெட்டை NBEMS இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கு, நீட் முதுகலை கலந்தாய்வு நடைபெறும். அதற்கு தகுதிபெறும் மாணவர்கள் MD, MS, PG முதுகலை படிப்புகளில் சேர்ந்துகொள்ளலாம். 50% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவ கலந்தாய்வு குழுவே நடத்தும். மீதமுள்ள இடங்கள் அந்தந்த மாநில கலந்தாய்வு அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும்.
NEET UG 2025 Result: நீட் இளநிலை தேர்வு முடிவுகள் எப்போது?
இது ஒருபுறம் இருக்க, கடந்த மே 4ஆம் தேதி நீட் இளநிலை தேர்வு நடைபெற்றிருந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், உத்தர பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்குகளிலும் தற்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் நீட் இளநிலை தேர்வு வெளியாகும் தேதியும் இன்னும் உறுதியாகவில்லை.
மேலும் படிக்க | இந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா? இனி மினிமம் பேலன்ஸ் தேவை இல்லை!
மேலும் படிக்க | இந்தியாவில் 3500+ கொரோனா பரவல்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர் பாதிப்பு?
மேலும் படிக்க | டெல்லியில் தமிழர் வாழும் குடியிருப்புகள் அகற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









