இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பணத்தை புரட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் தங்க நகைக்கடன் திட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்படாத நிலையில், அடுத்தடுத்து விதிக்கப்படும் இந்த நிபந்தனைகள், தங்கத்தை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க | மகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..

அடுக்கடுக்கான புதிய கட்டுப்பாடுகள்
- வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்க நகைக்கடன்களுக்கு, ரிசர்வ் வங்கி 9 முக்கிய அம்சங்கள் அடங்கிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
- இதுவரை தங்கத்தின் மதிப்பில் 90% வரை வழங்கப்பட்டு வந்த கடன், இனி 75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைக்கு, இனிமேல் அதிகபட்சமாக 75,000 ரூபாய் மட்டுமே கடன் பெற முடியும்.
- நகை அடகு வைப்பவர், அந்த நகை தனக்கு சொந்தமானது தான் என்பதை நிரூபிக்க, அதை வாங்கியதற்கான அசல் ரசீதை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ஒரு நபர், அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடகு வைக்க முடியும் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கடன் வழங்கும் நிறுவனங்கள், அடகு வைக்கப்படும் தங்கத்தின் தரத்தை சோதித்து, அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
ஏற்கனவே இருந்த சிக்கல்
சில மாதங்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்தது. முன்பு, கடன் காலக்கெடு முடியும் நாளில், வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, கடனை புதுப்பித்துக் கொள்ளும் வசதி இருந்தது. ஆனால், புதிய விதியின்படி, முழு கடன் தொகையையும் செலுத்தி நகையை மீட்ட பின்னரே, அடுத்த நாள் மீண்டும் அடகு வைக்க முடியும். இந்த விதிமுறையால், பழைய கடனை அடைக்க, அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சாமானிய மக்களின் வேதனை
தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள், இந்த சிக்கலை மேலும் அதிகரித்துள்ளன. "பல ஆண்டுகளுக்கு முன், திருமணத்தின் போது வாங்கிய நகைகளுக்கு இப்போது எங்கே சென்று ரசீது தேடுவது? நகையின் தூய்மைக்கு நாங்கள் எப்படி சான்றிதழ் கொடுப்பது?" என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நடைமுறை சிக்கல்கள், அவர்களை மீண்டும் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் அடகு கடைகளை நோக்கி தள்ளும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
வெள்ளி பொருட்களை அடகு வைத்தல், 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு மதிப்பிடுதல், 7 நாட்களுக்குள் நகையைத் திருப்பி கொடுக்காவிட்டால் அபராதம் போன்ற வேறு சில விதிகளும் இதில் அடங்கும். மக்களின் உண்மையான தேவைகளை உணர்ந்து, நடைமுறைக்குச் சாத்தியமான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் என்பதே தங்கத்தை நம்பி வாழும் பாமர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க | 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை... சாலையில் தூங்கியவரை கடத்திச் சென்று கொடூரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









