Delhi Pollution Control: டெல்லியில் காற்று மாசுபாடு என்பது கட்டுப்படுத்த முடியாத அளவு உயர்ந்துவிட்டது எனலாம். வருடாவருடம் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல ஆண்டுகளாக இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அதற்கு நிலையான தீர்வு எட்டப்படவில்லை எனலாம்.
Delhi Pollution: 155 மோசமான நாள்கள்
டெல்லியில் மட்டும் 2024ஆம் ஆண்டில் சுமார் 155 நாள்கள் காற்று மோசமான தரத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு டெல்லி மற்றும் டெல்லி புறநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு நீண்ட கால உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
Delhi Pollution: பழைய வாகனங்களுக்கு...
அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பாஜக அரசு புதிய முன்னெடுப்பை தொடங்கி உள்ளது. அதாவது, 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு இனி பம்புகளில் பெட்ரோல்கள் நிரப்பப்படாது என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா கடந்த திங்கட்கிழமை அன்று பதவியேற்ற நிலையில், இன்று இந்த முக்கிய அறிவிப்பை வெளிளியிட்டுள்ளார். மேலும், 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகனங்களை கண்டறிய தனிக்குழுவும் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Delhi Pollution: அரசின் முன்னெடுப்பு
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்ஸா கூட்டம் நடத்தினார். அதற்கு பின் பேசிய அவர்,"பெட்ரோல் பம்புகளில் இதற்காக சாதனங்களை பொருத்த இருக்கிறோம். அது 15 ஆண்டுகள் பழமையான கார்களை அடையாளம் காணும். அவர்களுக்கு பெட்ரோல் கொடுக்கப்பட மாட்டாது" என்றார். மேலும், டெல்லிக்குள் வரும் கனர வாகனங்கள் மீதே முதலில் அரசு கவனம் செலுத்தும் என்றும் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை குழுவினர் கண்காணிப்பார்கள் என்றும் கூறினார்.
டெல்லியை சுற்றிலும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான சாதனங்களை பொருத்த அறிவுறுத்தப்படுவார்கள். காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வானுயர் கட்டடங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் Anti-Smog Guns எனப்படும் காற்று மாசுப்பட்டை குறைக்க உதவும் சாதனம் பொருத்தப்படலாம். "டெல்லியில் காலியாக இருக்கும் நிலங்களில் புதிய காடுகள் உருவாகப்படும், அதன்மூலம் மாசுபாடு குறைக்கப்படும்" எனவும் பதிலளித்தார்.
Delhi Pollution: 2021இல் வந்த உத்தரவு
10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளின் (NCR) சாலைகளில் அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.
2021ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு சாலைகளில் இயங்குவது கண்டறியப்பட்டால், அத்தகைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழித்தொழிக்கும் இடங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | Rules Change | இந்திய ரயில்வே முக்கிய அப்டேட்! தட்கல் முறையில் அதிரடி மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









