India Pakistan Conflict: பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேறும்படி ஏப். 23ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், SAARC விலக்கு விசாவையும் நிறுத்திவைத்திருக்கிறது. அதேபோல், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
India Pakistan Conflict: சிந்து நதி நீர் ஒப்பந்தம்
1960ஆம் ஆண்டில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்ததே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அறிவிப்பு எனலாம். அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பாயும் சிந்து நதியின் நீர் பங்கீடு குறித்து இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. பாகிஸ்தானின் அதிக தூரம் பயணிக்கும் சிந்து நதிதான் அந்நாட்டு விவசாய பாசனம், மின் உற்பத்தி, குடிநீர் பயன்பாடு ஆகியவற்றுக்கு பெரும் பங்காற்றுகிறது.
அந்த வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதன் மூலம் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்தியா பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய நீரை தடுக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, 1960ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் இடையே கையெழுத்தானது. உலக வங்கியும் அதில் கையெழுத்திட்டிருந்தது. இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, 1965, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் போர் நடைபெற்றது. ஆனால், அந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படவில்லை. ஆனால், தற்போது ரத்தாகி உள்ளது.
India Pakistan Conflict: பாகிஸ்தானுக்கு மற்றொரு அடி
இந்நிலையில், பாகிஸ்தான் மீது இன்னொரு அடியாக இந்தியா மற்றொரு முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பாக்லிஹார் அணையில் இருந்து செனாப் நதி நீரை வெளியேறுவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிஷங்கங்கா அணையில் இருந்து ஜீலம் நதி நீரை வெளியேற்றுவதை நிறுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
India Pakistan Conflict: 2 அணைகள்
ஜம்முவின் ராம்பனில் உள்ள பாக்லிஹார் அணை மற்றும் வடக்கு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா அணை ஆகியவை நீர்மின் தயாரிப்புக்கான அணைகள் ஆகும். இங்கு நீர் திறப்பு நேரத்தை ஒழுங்குபடுத்தும் திறனை இந்தியா பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்லிஹார் அணை, இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இந்த பிரச்னையில் பாகிஸ்தான் கடந்த காலங்களில் உலக வங்கியின் நடுவர் மன்றத்தை நாடியிருக்கிறது. ஜீலத்தின் துணை நதியான நீலம் நதியில் அதன் தாக்கம் குறித்து கிஷன்கங்கா அணை சட்ட மற்றும் ராஜதந்திர ஆய்வுக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும் - உண்மை இதோ
மேலும் படிக்க | 450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதித்த பாகிஸ்தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









