ISIS காசர்கோடு தொகுதி வழக்கு தொடர்பாக கேரளாவில் NIA சோதனை!

இலங்கையில் கடந்த வாரத்தில் நடந்த மோசமான குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பந்தமாக, கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்!!

Last Updated : Apr 28, 2019, 04:55 PM IST
ISIS காசர்கோடு தொகுதி வழக்கு தொடர்பாக கேரளாவில் NIA சோதனை! title=

இலங்கையில் கடந்த வாரத்தில் நடந்த மோசமான குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பந்தமாக, கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்!!

இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த வாரம் ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என்று மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த கொடூர சம்பவத்தில் 253 பேர் கொல்லப்பட்டனர். 400 க்கும் அதிகமானோர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பாக கேரளாவில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

காசர்கோடு ஐ.எஸ். மாடல் தொடர்பாக மூன்று சந்தேகத்திற்கு இடமானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு பகுதியில் சோதனை நடந்துள்ளது. மூன்று பேரிடம் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையையும் மேற்கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending News