)
NISAR Satellite Launch: உலகின் மிக விலையுயர்ந்த புவி கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் NISAR (நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார்) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.40 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மாலை 5.40 மணிக்கு ஏவப்பட்ட இந்த செயற்கைகோள், சரியாக மாலை 5.59 மணிக்குள் அதன் சுற்றுப்பதையில் ஜிஎஸ்எல்பி ராக்கெட்டால் நிலைநிறுத்தப்பட்டது.
இதுதான் நாசா மற்றும் இஸ்ரோ முதல்முறையாக இணைந்து தயாரித்த செயற்கைகோளாகும். NISAR செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன், "செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா தலைமை பங்கை ஏற்பதில் இது ஒரு பெரிய நகர்வாக இருக்கும்" என்றார்.
மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், "இந்தியா செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்காக மற்ற நாடுகளை நம்பியிருந்த அந்த எளிமையான தொடக்கத்தில் இருந்து, இப்போது நாம் படிப்படியாக ஒரு தலைமை பங்கை நோக்கி நகர்ந்திருக்கிறோம்... இன்று, இரண்டு பெரிய நாடுகள் இணைந்து ஒரு முக்கியமான செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளன. மேலும் அது இந்திய மண்ணில் இருந்து நம் ராக்கெட் மூலம் ஏவப்படும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார். 1975ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ஆதரவுடன் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
GSLV-F16/NISAR
— ISRO (@isro) July 30, 2025
Liftoff
And we have liftoff! GSLV-F16 has successfully launched with NISAR onboard.
Livestreaming Link: https://t.co/flWew2LhgQ
For more information:https://t.co/XkS3v3M32u #NISAR #GSLVF16 #ISRO #NASA
NISAR செயற்கைகோள், 743 கி.மீ., தொலைவில் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக்கோளை நிலைநிறுத்தப்பட்டது. இதற்கு GSLV ராக்கெட் பயன்படுத்தப்பட்டது முதல் முறையாகும். இதுபோன்ற ஏவுதலுக்கு PSLV ராக்கெட்டே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. NISAR செயற்கைக்கோள், முதல் இரட்டை பாண்ட் ரேடார் செயற்கைக்கோள் ஆகும். நாசாவின் 'L-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'S-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையை சேர்ந்தது இந்த செயற்கைகோள்.
நிலம் மற்றும் பனியில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தல், இயற்கை பேரழிவுகளைக் கண்டறிதல், காலநிலை ஆய்வுகள் மற்றும் பேரிடர் குறித்த முக்கியமான தரவுகளை வழங்குவதே இந்த செயற்கைகோளின் நோக்கமாகும். NISAR செயற்கைகோளின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகள் இது அதன் பணியை செய்யும். NISAR செயற்கைக்கோள் ஒவ்வொரு 97 நிமிடங்களுக்கும் ஒரு முறை பூமியைச் சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் பூமியின் நிலப்பரப்பு மற்றும் கடல் மேற்பரப்பின் சில பகுதிகளின் படங்களை அனுப்பும்.
தனித்துவமான புவி இமேஜிங் செயற்கைக்கோளான இது ஒரு அற்புதமான தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இயற்கை பேரழிவுகளை முன்னாடியே கணித்து அதற்கான எச்சரிக்கைகளை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதில் இந்த செயற்கைகோள் முக்கிய பங்கு வகிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ