)
Nitish Kumar Bihar CM Oath Latest News: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக கடந்த நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 2020 தேர்தலில் 125 இடங்களை மட்டுமே வென்ற இக்கூட்டணி, இம்முறை 202 இடங்களை பிடித்து அசுர வெற்றியை பதிவு செய்தது. அதேநேரத்தில், கடந்த தேர்தலில் 110 இடங்களை வென்று கடினமான போட்டியை அளித்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி இம்முறை வெறும் 35 தொகுதிகளில் வென்று படுதோல்வியைச் சந்தித்தது.
தேர்தலுக்கு முன் மகா கூட்டணி மட்டுமே முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவித்திருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கவில்லை, அதேநேரத்தில் நிதிஷ் குமார் தலைமையில்தான் தேர்தலை சந்திக்கிறோம் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா கூறியிருந்தார். மேலும், தேர்தலுக்கு பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி, முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என்றார். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்கள் நிதிஷ் குமாரை தேர்வு செய்த நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகிறார். பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் 10வது முறையாக இன்று (நவ. 20) பதவியேற்றார். அவருடன் அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றனர்.
Nitish Kumar takes oath as the Bihar Chief Minister for the 10th time at Patna's historic Gandhi Maidan pic.twitter.com/zaR6uuKcQ5
— ANI (@ANI) November 20, 2025
கடந்த ஆட்சியில் துணை முதல்வராக செயல்பட்ட பாஜகவின் விஜய் குமார் சின்ஹா, சாம்ராட் சௌத்ரி ஆகியோருக்கு மீண்டும் அப்பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவின் காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மூத்த தலைவர்கள், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தின் முதல்வர்கள் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இன்று காலை 11 மணியளவில் நிதிஷ் குமார் பதவியேற்றார். ஆளுநர் ஆரிஃப் முகமது கான் நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நிதிஷ் குமாரை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்யும் 8வது ஆளுநர் இவர் என்பதும் கவனிக்கத்தக்கது. வரும் நவ. 22ஆம் தேதியுடன் கடந்த ஆட்சிக்காலம் நிறைவுபெறும் சூழலில், நிதிஷ் குமார் நேற்று ராஜினாமாவை அளித்திருந்தார். நிதிஷ் குமார் காபந்து முதல்வராகவும் தொடர்ந்த நிலையில், தற்போது முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
மேலும், பாஜகவின் பிரேம் குமார் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின்றன, ஐக்கிய ஜனதா தளத்திற்கு துணை சபாநாயகர் பதவு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அங்கும் வகிக்கும் சிறிய கட்சிகளான சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி தளம், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
#WATCH | Vijay Choudhary, Bijendra Prasad Yadav, Shrawon Kumar, Mangal Pandey, Dilip Jaiswal, Ashok Choudhary take oath as state ministers in Bihar cabinet at the oath ceremony being held at Patna's Gandhi Maidan.
— ANI (@ANI) November 20, 2025
(Source: DD News) pic.twitter.com/YBGye0ecMW
கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த விஜய் குமார் சின்ஹா, சாம்ராட் சவுத்ரி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுடன் விஜய் குமார் சவுத்ரி, விஜேந்திர குமார் யாதவ், ஷ்ரவன் குமார், மங்கள் பாண்டே, திலீப் குமார் ஜெய்ஸ்வால், லெஷி சிங், அசோக் சவுத்ரி, மதன் சாஹ்னி, நிதின் நபி, ராம் கிரிபால் யாதவ், சந்தோஷ் குமார் சுமன், சுனில் குமார், முகமது ஜமா கான், சஞ்சய் சிங் டைகர், அருண் ஷங்கர் பிரசாத், சுரேந்திரன் மேத்தா, நாராயண் பிரசாத், ராம நிஷாத், லக்கேந்திர குமார் ரோஷன், ஷ்ரேயாஷி சிங், பிரமோத் குமார், சஞ்சய் குமார், சஞ்சய் குமார் சிங், மற்றும் தீபக் பிரகாஷ் ஆகிய 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்று, பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ