நெடுஞ்சாலைகளில் மதுபான கடைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு
நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுகடைகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி: நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுகடைகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது.
விபத்தினை ஏற்படுத்தும் மதுபானங்களில் இருந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளை இழுத்து மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் மதுகடைகளை திறப்பதற்கு புதியதாக உரிமம் வழங்க கூடாது என்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கூறியுள்ளார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எந்த மதுபானக் கடைகளும் இயங்கக் கூடாது என்றும், புதிதாக திறக்க அனுமதியும் வழங்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.