Ladki Bahin Yojana: பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகவும், அவர்கள் சுதந்திரமாக செயல்படும் விதத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. குடும்பத்தின் தூணாக மட்டும் பார்க்காமல் ஒரு சமூகத்தின் தூணாகவும் பெண்களை பார்க்க வேண்டும் என்பதை அரசுகள் வலியுறுத்துகின்றன.
தமிழ்நாடு அரசை பொருத்தவரை மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் புதுமைப்பெண் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆதரவற்ற பெண்களுக்கு, கைம்பெண்களுக்கு என்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Ladki Bahin Yojana: மாதம் ரூ.1,500
அந்த வகையில், தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimmai Thogai) பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. மகாராஷ்டிராவில் லட்கி பஹின் யோஜனா (Ladki Bahin Yojana) என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டு மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,500 கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 மாதங்களாக பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்பட்ட நிலையில் 13வது தவணைக்கு பெண்கள் காத்திருக்கின்றனர்.
Ladki Bahin Yojana: 2.25 கோடி பயனாளர்கள்
இந்த சூழலில், மகாராஷ்டிராவின் 26 லட்ச பெண்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அம்மாநில அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது, லட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளர்களாக மொத்தம் 2.25 கோடி உள்ளனர். இதில் இந்த 26 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ladki Bahin Yojana: 26 லட்சம் பேருக்கு ஆப்பு
தவறான ஆவணங்களை சமர்பித்து இந்த திட்டத்தின் கீழ் விதியை மீறி மாதந்தோறும் ஊக்கத்தொகை பெற்று வந்ததை அவர்கள் யார் யார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த 26 லட்சம் பேர் யார் யார் என்ற விவரங்களும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://ladakibahin.maharashtra.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பதிவு எண் அல்லது ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு செய்து அதில் ஒருவரின் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி, பஞ்சாயத்து அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகத்தில் பட்டியல் இருக்கும்.
Ladki Bahin Yojana: ஆட்சேபனை எழுப்பலாம்
ஒருவேளை இந்த பட்டியலில் ஒருவரின் பெயர் தவறுதலாக இடம்பெற்றிருந்தால் நீங்கள் ஆட்சேபனை செய்து விண்ணப்பம் தாக்கல் செய்யலாம். அதில் நீங்கள் ஊக்கத்தொகையை பெற தகுதியான ஆவணங்களை சமர்பித்தால் மீண்டும் திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவீர்கள்.
மேலும் படிக்க | வைரல் வீடியோ: குடிபோதையில் இருந்த இளைஞருக்கு அடி, உதை... மெட்ரோவில் நடந்த சம்பவம்
மேலும் படிக்க | முதல் மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனையில்..2வது மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்!
மேலும் படிக்க | ராகுல் காந்தியுடன் விரைவில் விஜய் சந்திப்பு? உடைகிறதா திமுக கூட்டணி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









