அதிகரிக்கும் COVID-19 தொற்றால் டெல்லி மக்கள் பீதி அடையத் தேவையில்லை...

டெல்லியில் அதிகரிக்கும் COVID-19 தொற்றால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jul 6, 2020, 01:15 PM IST
  • செயலில் உள்ள 25,000 நோயாளிகளில், 15,000 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
  • நாட்டின் முதல் கொரோனா பிளாஸ்மா வங்கியையும் நாம் தொடங்கியுள்ளோம். மிதமான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்று எங்கள் சோதனைகள் காட்டுகின்றன.
அதிகரிக்கும் COVID-19 தொற்றால் டெல்லி மக்கள் பீதி அடையத் தேவையில்லை... title=

டெல்லியில் அதிகரிக்கும் COVID-19 தொற்றால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி(Delhi)-யில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்., COVID19 தொற்றுகளின் எண்ணிக்கை டெல்லியில் 1 லட்சத்தை தாண்டியுள்ளது, எனினும் சுமார் 72,000 பேரும் மீண்டு வந்துள்ளதால் பீதி அடையத் தேவையில்லை.

READ | டெல்லியில் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே குணமடைக்கின்றனர்: கெஜ்ரிவால்!...

செயலில் உள்ள 25,000 நோயாளிகளில், 15,000 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. நாட்டின் முதல் கொரோனா(Coronavirus) பிளாஸ்மா வங்கியையும் நாம் தொடங்கியுள்ளோம். மிதமான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்று எங்கள் சோதனைகள் காட்டுகின்றன.

பிளாஸ்மா தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை, தானம் செய்ய முன்வருபவர்களை விட அதிகமாக உள்ளது. தகுதியுள்ள அனைவருமே முன் வந்து பிளாஸ்மா தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இது எந்த வலியையும் பலவீனத்தையும் ஏற்படுத்தாது. பிளாஸ்மாவை நன்கொடை அளிப்பவர்கள் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

READ | தில்லியில், தெரு நாய்களைக் காப்பாற்ற சென்றவர்கள் தாக்கப்பட்ட பரிதாபம்!!

பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு எங்கள் குழு கொரோனாவில் இருந்து மீண்டவர்களை அழைக்கிறது, தயவுசெய்து இந்த அழைப்பை மறுக்க வேண்டாம். குணமடைந்த நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பில் தற்போது டெல்லி இந்தியா அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் படி டெல்லியில் 99,444 வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் 25,038 பேர் மட்டுமே தற்போது தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 71, 339 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர் எனவும், 3,067 பேர் தொற்றால் இறந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News