கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியாவில் ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் ஒரு டோல்கேட் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தவிர அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது சுங்க கட்டணம் தொடர்பாக சில மாற்றங்களும் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கார்கள் வைத்திருக்கும் மக்களே சுங்க கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று புலம்பி வரும் நிலையில் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
"தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர். மத்திய அரசிற்கு தற்போது வரை அப்படி எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் பொய்யானது. அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை" என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.
நிதின் கட்கரி சொன்ன முக்கிய தகவல்!
"இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது என்று சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. தற்போது வரை அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு முழுமையாக தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையை சரி பார்க்காமல் தவறான செய்திகளை பரப்புவது நல்லதில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாகவே இரு சக்கர வாகனங்களுக்கு ஜூலை முதல் சுங்க கட்டணம் அறிமுகப்படுத்த உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
சுங்க சாவடிகளில் மாற்றம்!
இந்தியாவில் சுங்க கட்டணங்கள் தொடர்பாக சில மாற்றங்களையும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ரூபாய் 3000 பாஸ் பெற்று சுங்க சாவடிகளில் ஓர் ஆண்டுக்கு இலவசமாக பயணிக்கலாம் என்று நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். அதே போல வருங்காலத்தில் சுங்க கட்டணங்கள் சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் மூலம் வசூலிக்கும் திட்டமும் வர உள்ளது. ஒரு வாகனம் எத்தனை கிலோமீட்டர் பயணிக்கிறதோ, அதற்கேற்றார் போல கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை வர உள்ளது. தற்போது வெளிநாடுகளில் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ