ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறிகளில், கார்கில் இணைய தடை இன்று ஐந்து மாதங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட கடுமையான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக , சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை நிலைநாட்ட இணைய சேவை தடைசெய்யப்பட்டது. 


இந்நிலையில் தற்போது இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட 145 நாட்களுக்குப் பிறகு மீட்டமைக்கப்பட்டுள்ளது. இணைய சேவை மீட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உள்ளூர்வாசிகள் பெருமூச்சு விட்டுள்ளனர். 


இப்பிரதேசங்களில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் இணைய சேவைகளை மீட்டெடுக்க மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர், எனினும் பொதுமக்கள் எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க பிராந்தியத்தில் இணைய சேவை தொடர்ந்து தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இணைய சேவை மீண்டும் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து கார்கிலில் வசிக்கும் ஜியா தெரிவிக்கையில்., "இன்று காலை முதல் 4G மொபைல் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், சுற்றுலா தொடர்பான வேலைகள் உள்ளவர்கள் இப்போது நிம்மதியடைவார்கள்" என தெரிவித்துள்ளார்.


இதனிடையே ஸ்ரீநகரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவிக்கையில், தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிப்பது தொடர்ச்சியான செயல் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலர் விடுவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நிர்வாகம் அவ்வப்போது தகுந்த முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக உற்துறை அமைச்சகம், செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் இருந்து 72 ஆயுதப்படைகளை திரும்பப் பெற்றது.


மத்திய ஆயுத பொலிஸ் படையில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் (CRPF) 24 நிறுவனங்களும், எல்லை பாதுகாப்பு படை (BSF), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) மற்றும் சாஷாஸ்திரா சீமா பால் (SSB) ஆகிய 12 நிறுவனங்களும் அடங்கும். 


ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலையை மறுஆய்வு செய்வதற்காக நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் பின்னர் துருப்புக்களை நகர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தில் கூட்டம் நடைபெற்றதுடன், பிராந்தியத்தை அமைதியாக வைத்திருக்க ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.