)
11 Government Documents Proof Of Citizenship: பீகார் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தற்போது தேர்தல் ஆணையம் பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் மக்களின் குடியுரிமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
பீகார் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் போலீசார் மற்றும் அரசு முகமைகள் குடியுரிமை தொடர்பாக சரிபார்ப்பை மேற்கொள்கின்றன. இதனால் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அதிகம் வசதிப் படைத்தவர்களும் கூட குடியுரிமையை நிருபிப்பதில் திணறுவதாக கூறப்படுகிறது.
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அவ்வளவு ஏன் ரேஷன் அட்டை கூட குடியுரிமைக்கான சான்று கிடையாது என தேர்தல் ஆணையம் தெளிவாக தெரிவித்துவிட்டது. இதன்மூலம் மக்களும் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க இந்த ஆவணங்களை பயன்படுத்த இயலாது. பீகார் மற்றும் மற்ற மாநிலத்தவர்களும் இந்த ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையில் தங்களின் பெயரை சேர்க்க முடியாது.
புதிய விதிகளின்படி, பீகாரின் கிராமப்புறங்களிலும், மிகவும் பின்தங்கிய பகுதிகளிலும் வசிக்கக்கூடியவர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்ப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது, தாங்கள் இந்திய நாட்டின் குடிமகன்தான் என்பதை நிரூபிப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது, நாடாளுமன்ற வரை இந்த பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில், பொதுமக்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் தான் என நிரூபிக்க இந்த 11 ஆவணங்களை சமர்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. அவை பின்வருமாறு:
- பாஸ்போர்ட்
- மத்திய/மாநில அரசு ஊழியர்கள் அல்லது பொதுத்துறை ஊழியர்களுக்கோ அல்லது ஓய்வூதியதாரர்களுக்கோ வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது பென்ஷன் சான்றுகள்.
- 1987ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்கு முன் அரசு அல்லது பொது நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஏதாவது அதிகாரப்பூர்வ அடையாள அட்டை அல்லது சான்றிதழ்கள்.
- தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழங்களால் வழங்கப்பட்ட கல்விச் சான்றிதழ்
- வன உரிமை சான்றிதழ்
- உள்ளூர் அல்லது மாநில அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட குடும்ப பதிவேடு
- அதிகாரிகளால் வழங்கபப்ட்ட சாதி சான்றிதழ்கள் (ஓபிசி/எஸ்சி/எஸ்டி)
- மாநில அதிகாரிகளால் வழங்கப்பட்ட நிரந்தர குடியுரிமை சான்றிதழ்
- அரசால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்
- தேசிய குடிமக்கள் பதிவேடு (தேவைப்படும் பகுதிகளில்...)
இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது, நீங்கள் இந்திய குடிமக்கள் என நிரூபித்துவிடலாம். இருப்பினும் இதனை அனைவரிடத்திலும் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பாது. சிக்கலுக்குரிய பகுதிகளிலும், சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் மட்டுமே இந்த கேள்விகள் எழுப்பப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ