NEET Topper List 2025: நீட் தேர்வில் டாப் 10 ரேங்க் பெற்றவர்கள்! முழு பட்டியல்..

NEET UG Topper List 2025: நீட் இளநிலை நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இதில், டாப் 10 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2025, 04:04 PM IST
  • நீட் டாப் 10 மதிப்பெண்கள் பெற்றவர்கள்
  • முதல் மதிப்பெண் பெற்றவர் யார்?
  • 10 ஆண்களில் 1 பெண் டாப் லிஸ்டில் இருக்கிறார்..
NEET Topper List 2025: நீட் தேர்வில் டாப் 10 ரேங்க் பெற்றவர்கள்! முழு பட்டியல்..

NEET UG Topper List 2025: நீட் இளநிலை தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதியான இன்று வெளியாகியிருக்கிறது. ஈந்த தேர்வு முடிவினை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருக்கிறது. இந்த தேர்வில், டாப் 100 இடத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் இடம் பெற்றிருக்கின்றனர்.

Add Zee News as a Preferred Source

டாப் ரேங்க் பெற்ற மாணவர்கள்:

நீட் இளநிலை தேர்வில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 

முதல் இடத்தை மகேஷ் குமார் என்கிற மாணவர் பெற்றிருக்கிறார். ராஜஸ்தானை சேர்ந்த இவர், 99.9999547 சதவீதம் (பர்சண்டைல்) பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை உத்கர்ஷ் அவதியா பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர், 99.9999095 சதவீதத்தை பெற்றுள்ளார்.

மூன்றாவது இடத்தை கிரிஷாங் ஜோஷி என்பவர் பெற்றுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 99.9998189 சதவீதத்தை பெற்றிருக்கிறார்.

நான்காவது இடத்தை மிருணாள் கிஷோர் என்பவர் பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த இவர், 99.9998189 சதவீதத்தி தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஐந்தாவது இடத்தை அவிகா அகர்வால் எனும் பெண் பெற்றுள்ளார். 99.9996832 விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், குஜராத்தை சேர்ந்தவர்.

குஜராத்தை சேர்ந்த ஜெனில் வினோத்பாய் என்பவர், 6வது இடத்தை பெற்றுள்ளார். இவரது தேர்ச்சி சதவீதம் 99.9996832 ஆகும். 

ஏழாவது இடத்தை கேசவ் மிட்டல் என்பவர் பெற்றிருக்கிறார். பஞ்சாப்பை சேர்ந்த இவர், 99.9996832 விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

எட்டாவது இடத்தை பவ்யா சிராக் என்பவர் பெற்றுள்ளார். குஜராத்தை சேர்ந்த இவர் பெற்றுள்ள சதவீதம் 99.9996379 ஆகும்.

ஒன்பதாவது இடத்தை ஹர்ஷ் கெடாவத் என்பவர் பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த இவர் பெற்றுள்ள சதவீதம் 99.9995474 ஆகும்.

பத்தாவது ரேங்கை ஆரவ் அகர்வால் என்பவர் பெற்றுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 99.9995474 சதவீதம் பெற்றிருக்கிறார்.

10 பேரில் ஒருவர் மட்டும் பெண்:

வழக்கமாக எந்த போட்டி தேர்வுகள் அல்லது பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டாலும் அதில் அதிக தேர்ச்சி பெறுவது பெண்களாக இருப்பர். ஆனால், நீட் தேர்வில் அந்த வரலாறு கொஞ்சம் மாற்றியெழுதப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்று டாப் 10 ரேங்கை பெற்ற மாணவர்களில், ஒருவர் மட்டுமே பெண். அவர், ஐந்தாவது இடத்தை பெற்ற அவிகா அகர்வால் என்பவர் ஆவார்.

டாப் 100 லிஸ்ட்: தமிழகத்தை சேர்ந்த 6 மாணவர்கள்..

இந்திய அளவில் நடத்தப்பட்ட இந்த நீட் இளநிலை நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களில், 6 பேர் மட்டும் டாப் 100ல் இடம் பெற்றுள்ளனர்.

சூர்ய நாராயணன் எனும் மாணவர் 27வது இடத்தை பெற்றிருக்கிறார். அபினீத் நாகராஜ் எனும் மாணவர் 50வது இடத்தையும், புகழேந்தி என்பவர் 61வது இடத்தையும் பெற்றுள்ளனர். கூடவே, ஹ்ருத்திக் விஜய ராஜா என்பவர், 63வது இடத்தையும், ராஜேஷ் என்பவர் 78வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஸ்ரீஹரி என்கிற மாணவர் 88வது இடத்தை பெற்றிருக்கிறார்.

மேலும் படிக்க | NEET UG: வெளியான நீட் தேர்வு முடிவுகள்... ரிசல்ட், Answer Key டவுன்லோட் செய்வது எப்படி?

மேலும் படிக்க | நீட் தேர்வு முடிவுகள் 2025: டாப் 100-ல் இடம் பெற்ற தமிழக மாணவர்கள்! எத்தனை பேர் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News