ஆபரேஷன் மகாதேவ்: 14 நாள்கள் போட்ட திட்டம்... யார் இந்த பயங்கரவாதி ஹாஷிம் மூசா?

Operation Mahadev: பகல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹாஷிம் மூசா சுட்டுக்கொல்லப்பட்ட இந்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை எப்படி திட்டமிடப்பட்டது என்பது குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 28, 2025, 09:06 PM IST
  • ஆபரேஷன் மகாதேவ் இன்று மேற்கொள்ளப்பட்டது.
  • இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  • இதில் இருவர் பகல்காம் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள்.
ஆபரேஷன் மகாதேவ்: 14 நாள்கள் போட்ட திட்டம்... யார் இந்த பயங்கரவாதி ஹாஷிம் மூசா?

Operation Mahadev: பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மூண்டது. இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் ஒரு கட்டத்தில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

Add Zee News as a Preferred Source

Operation Mahadev: யார் இந்த ஹாஷிம் மூசா? 

நாட்டையே உலுக்கிய இந்த பகல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையே 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் மூன்று பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய நிலையில், அதில் சுலைமான் ஷா (எ) ஹாஷிம் மூசா என்பவர்தான் பகல்காம் தாக்குதலில் மூளையாக இருந்தார் என கூறப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதல் பல நாள்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டதாகும். இதனை எப்படி இந்திய ராணுவம் சாத்தியப்படுத்தினர் என்பதை இங்கு காணலாம். 

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான ஹாஷிம் மூசா பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவை குழுவின் கமாண்டோ பயிற்சி பெற்றவர் ஆவார். இவர் ஹபீஸ் சையத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்து பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் காட்டிலும், மிக கடினமான சூழல்களிலும் வாழ்வதற்கு பயிற்சி பெற்றவர் ஆவார்.

Operation Mahadev: ஹாஷிம் மூசா நடத்திய தாக்குதல்கள் 

2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்குள் நுழைந்த ஹாஷிம் மூசா, தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தொடங்கினார். குறிப்பாக, 6 பயங்கரவாத தாக்குதலில் இவருக்கு தொடர்பிருக்கலாம் என பாதுகாப்பு படையினர் தரப்பில் தகவல்கள் கூறப்படுகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள காண்டர்பாலில் இவரது குழுவால் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பாரமுல்லாவில் இவரது குழு நடத்திய தாக்குதலில் 4 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

Operation Mahadev: ஆபரேஷன் மகாதேவ் எதற்காக?

பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இவரை பிடித்தால் ரூ.20 லட்சம் தருவதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவித்திருந்தனர். இத்தகைய கொடூரமான பயங்கரவாதியை பிடிக்கவே ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மகாதேவ் சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர். இதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும், மின்னணு ரீதியாகவும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்துள்ளனர், ஜூலை மாதத் தொடக்கத்திலேயே பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை அவர்கள் பெற்றுள்ளனர்.

Operation Mahadev: காட்டுக்குள் போர் பயிற்சி

சீனாவின் அல்ட்ரா ரேடியா தொலைத்தொடர்பு அமைப்பின் இயக்கத்தை கண்டறிந்த பிறகே இந்த ஆபரேஷனை திட்டமிட்டுள்ளனர். இந்த சீன ரேடியோ அமைப்பின் மூலமே லஷ்கர்-இ-தொய்பா பயங்கராவதிகள் மறைமுகமாக தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடம்தான் டச்சிகம் காட்டுப்பகுதி. இந்த இடத்தை ராணுவத்தினர் முழுமையாக சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். அந்த சிகரம் அதிக உயரம் கொண்டதாகும், அங்கு பயங்கரவாதிகள் அடிக்கடி போர் பயிற்சியில் ஈடுபடுவது குறித்தும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.

Operation Mahadev: 14 நாள்கள் திட்டம்

தொடர்ந்து இந்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையை மேற்கொள்ளும் முன் பாதுகாப்பு படையினர், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்ன் பயங்கரவாதிகளை 14 நாள்கள் பின்தொடர்ந்துள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மறைமுக தகவல்களை அனுப்ப சீன ரேடியோவை பயன்படுத்துகின்றனர். 2016ஆம் ஆண்டில் இதை WY SMS என்றழைப்பார்கள்.

சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் அனைவருமே அதிகம் தேடப்படும் நபர்களே ஆவர். அனைவரும் வெளிநாட்டினர். உளவுத்துறையின் தகவலை தொடர்ந்தே பாதுகாப்பு படையினர் செயல்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஹர்வானின் முல்னார் பகுதியில் ஆபரேஷனை தொடங்கி உள்ளனர். இந்த மோதலின் போது Carbine ரக துப்பாக்கிகள், ஏகே-47 துப்பாக்கிகள், 17 ரைபிள் கையெறி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பெரிய தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகம் எழுப்புகின்றனர்.

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் மோதல்: மோடி - டிரம்ப் பேசவே இல்லை... ஜெய்சங்கர் பளீச்!

மேலும் படிக்க | ரூ.20 லட்சத்திற்கு மேல் லாபம்! போஸ்ட் ஆபீஸ் சிறப்பு திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 30 நாட்கள் கூடுதல் விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News