Operation Sindoor : பாகிஸ்தானை அதிரவைத்த 25 நிமிடங்கள் குறித்த மிக முக்கிய தகவல் - பரபரப்பான நிமிடங்கள்

Operation Sindoor Explained : பாகிஸ்தானை அதிரவைக்க நள்ளிரவில் இந்தியா எடுத்துக்கொண்ட 25 நிமிடங்கள் குறித்த மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : May 7, 2025, 01:19 PM IST
  • பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்
  • மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்
  • இந்திய ராணுவம் கொடுத்த விளக்கம்
Operation Sindoor : பாகிஸ்தானை அதிரவைத்த 25 நிமிடங்கள் குறித்த மிக முக்கிய தகவல் - பரபரப்பான நிமிடங்கள்

Operation Sindoor Explained Tamil : பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது. வெறும் 25 நிமிடங்களில் இந்தியா நடத்திய 24 தாக்குதல்களில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிக்க வைக்கப்பட்டு தாக்கப்பட்டதுடன் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மே 7 ஆம் தேதி இன்று அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை நீடித்த இந்த தாக்குதல்களை, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என  குறிப்பிட்டு நடத்தியுள்ளன.

Add Zee News as a Preferred Source

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கி 70 பயங்கரவாதிகளைக் கொன்ற 24 ஏவுகணைகளை இந்தியா செலுத்த வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே ஆனது. புது தில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்தனர். ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இது இந்தியாவின் பதில் நடவடிக்கை என்று விவரித்தனர். 

கர்னல் குரேஷி இந்தியா நடத்தியிருக்கும் தாக்குதல் குறித்து பேசும்போது, "கடந்த மூன்று தசாப்தங்களாக, பாகிஸ்தான், பாகிஸ்தான் முழுவதும் தீவிரவாத குழுக்களுக்காக ஆட்சேர்ப்பு மையங்கள், பயிற்சிப் மையங்கள் மற்றும் ஏவுதளங்கள் உள்ளிட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இந்தியா எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளை அகற்றி எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளது," என்று கூறினார்.

"இந்தியாவிற்கு எதிரான மேலும் தாக்குதல்கள் வரவிருப்பதாக நம் நாட்டு உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. இதனை தடுக்கவே கட்டாய தாக்குதல்களை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. எனவே இன்று அதிகாலையில், இதுபோன்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க இந்தியா சரியான பதிலடியை கொடுத்திருக்கிறது.  அதேநேரத்தில் தீவிரவாத முகாம்களை  குறி வைத்து மட்டுமே இந்த தாக்குதல்கள் நடத்திருக்கின்றன" என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள்

ஏவுகணை தாக்குதல்கள் முசாபராபாத், கோட்லி, பஹாவல்பூர், ராவலகோட், சக்ஸ்வரி, பீம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்தன. இவை அனைத்தும் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக உளவுத்துறை அமைப்புகளால் நீண்ட காலமாக சந்தேகிக்கப்படும் பகுதிகள். இந்த தளங்கள் லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) உடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது, இவை இந்தியாவில் பல ஆண்டுகளாக பல தாக்குதல்களுக்குப் பொறுப்பான இரண்டு பயங்கரவாதக் குழுக்களாகும்.

தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்பது இடங்களில், ஐந்து இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு இடங்கள் பாகிஸ்தானின் பிரதான நிலப்பகுதியிலும் இருந்தன. குறிப்பாக, பஹவல்பூர், ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோட்டையாக அறியப்பட்டது. முசாபராபாத் மற்றும் பீம்பர் ஆகியவை காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கான போக்குவரத்து மற்றும் தளவாடப் புள்ளிகளாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்களால் முன்னர் அடையாளம் காணப்பட்டன.

மத்திய அரசின் அறிக்கையின்படி, எந்த நோக்கத்துக்காக தாக்குதல் நடத்தப்பட்டதோ, அனைத்து தாக்குதல்களும் அதனை கச்சிதமாக முடித்தன. கட்டளை மையங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதை UAV உளவுத்துறை உறுதிப்படுத்தியது. மேலும், பாகிஸ்தான் இராணுவ நிலைகள் எதுவும் இந்திய ராணுவத்தால் குறிவைக்கப்படவில்லை.

பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

இந்தியா நடத்தியிருக்கும் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தரை மற்றும் வான்வழி என இரண்டு வகையான ஏவுகண தாக்குதல்களும் ஒருசேர மேற்கொள்ளப்பட்டு ஆப்ரேஷன் சிந்தூர் கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க - Operation Sindoor: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி! பலியானோர் குடும்பம் சொல்வது என்ன?

மேலும் படிக்க - ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அமித்ஷா சொன்ன முக்கிய தகவல்! அடுத்த தாக்குதல் எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News