India Pakistan War Which Country Backs India : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ஐ ஆரம்பித்தது. அதன்படி, கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளும் வலுவான ஆயுதங்களை கொண்டு தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், சில வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கும், சில வல்லரசு நாடுகள் பாகிஸ்தான் பக்கமும் இருக்கின்றன. அவை எந்தெந்த நாடுகள் தெரியுமா?
அமெரிக்கா:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் குறித்து பேசினார். அப்போது இது பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அணு ஆயுதங்கள் கொண்ட ஆசிய நாடுகளான இவை இரண்டும் போர் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இது குறித்து பேசுகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று கூறினார். ஆனால், இவர்கள் இருவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்:
இஸ்ரேல், இந்தியாவிற்கு தனது வலுவான ஆதரவை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் இஸ்ரேலிய தூதர் ராவன் அசார் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் பதிவிட்டு இருந்தார். இந்தியாவும் இஸ்ரேலும் வர்த்தக ரீதியாகவும் தொடர்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் (UK):
இந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார். இந்த போரால் பிரிட்டனுக்கு ஆபத்து வரும் என்று தெரிவித்த அவர், நாட்டு மக்களை பாதுகாப்பதில் இரு நாடுகளும் முதலில் கவனம் செலுத்த வேண்டுமென கூறினார். அதே நேரத்தில் பிரிட்டன், பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சீனா:
சீனா, இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருமாறு வலியுறுத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியிருந்ததை அடுத்து, இந்த நிலை தங்களுக்கு கவலை அளிப்பதாக சீன அரசாங்கம் தெரிவித்தது. இந்த இரு நாடுகளும் தங்களின் சீனாவின் அண்டை நாடுகள் என்பதால், இந்த தாக்குதல்கள் தங்களுக்கு கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீனா, எந்த வகையான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதாகவும், இரு நாடுகளும் நிலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. சீனா, பாகிஸ்தானுடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருக்கிறது. மேலும், சீனா-பாகிஸ்தானின் பொருளாதார வழித்தடமான CPEC-ன் திட்டத்தில் சீனா பெரும் முதலீட்டை செய்திருக்கிறது. இதனால், பாகிஸ்தானுக்கு எந்த ஆபத்து வருவதையும் சீனா விரும்பாது என்று கூறப்படுகிறது.
ரஷ்யா:
ரஷ்யா, இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி நிலையை பேண வேண்டும் என்றும், பதட்டங்களை அதிகரிக்கும் எந்த நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதனை, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தியிருந்தார். ரஷ்யா-இந்தியா இடையே நல்லுரவு இருப்பதால், போர் சமயங்களில் இந்த நாடு இந்தியா பக்கம் நிற்கலாம் என கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகள்:
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத் துறை துணைப் பிரதமர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், இந்தியா-பாகிஸ்தான் நிலை குறித்து பதிவிட்டிருந்தார். அதில், பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பதற்றங்களை மேலும் அதிகரிப்பதைத் தவிர்த்து, கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். UAE பேரரசானது, அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரும்புவதாகவும், இந்த போர் பதற்றத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | மே 15 வரை முக்கிய விமான நிலையங்கள் மூடல்! பாதுகாப்பிற்காக மத்திய அரசு அறிவிப்பு!
மேலும் படிக்க | இந்தியா-பாகிஸ்தான் போர்: இதனால் சீனாவுக்கு என்ன பாதிப்பு வரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









