India Attack Pakistan: விமானங்கள் இயங்காது! பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Indian pakistan war: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Written by - RK Spark | Last Updated : May 7, 2025, 06:13 AM IST
  • பாகிஸ்தானில் இந்தியாவின் தாக்குதல்.
  • அதிகாலையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இதனால் விமானங்கள் நிறுத்தம்.
India Attack Pakistan: விமானங்கள் இயங்காது! பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதிகளில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. Operation Sindoor பெயரிடப்பட்டுள்ள இந்த தாக்குதலை இந்திய அரசு அதிகாலை 2 மணிக்கு அறிவித்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க - LIVE India Pakistan War: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கையை தொடங்கியது!

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்

இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ட்வீட் செய்துள்ளார். அதில் "பாகிஸ்தானில் ஐந்து இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை தந்திரமான நடத்தி உள்ளது. இந்தியாவால் திணிக்கப்பட்ட இந்த போர் நடவடிக்கைக்கு வலுவாக பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது, மேலும் பலமான பதிலடி கொடுப்போம். முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுடன் நிற்கிறது. பாகிஸ்தான் மக்களுக்கும், பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கும் எப்படி இதனை கையாள்வது என்று தெரியும். எதிரி அவர்களின் தீய இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

விமானங்கள் நிறுத்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாகவும், மாறிவரும் வான்வெளி நிலைமைகள் காரணமாகவும் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர் மற்றும் தர்மசாலா ஆகிய இடங்களுக்கு செல்லும் மற்றும் புறப்படும் எங்கள் விமானங்கள் பாதிக்கப்படுகின்றன. தற்போதைய வான்வெளி கட்டுப்பாடுகளால் பின்னர் இந்த பகுதிகளுக்கு விமானங்கள் செல்லும்/புறப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும், "வட இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்" என்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்திற்கு மத்தியில் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.

"தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மே 7 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. அதிகாரிகளிடமிருந்து மேலும் அப்டேட்கள் வரும் வரை விமானங்கள் இயங்காது. அமிர்தசரஸுக்குச் செல்லும் இரண்டு சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்படுகின்றன. இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - நாளை போர்க்கால ஒத்திகை: மின் தடை, சைரன் ஒலி... மக்கள் செய்ய வேண்டியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News