Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?

Operation Sindoor Latest Update : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதையடுத்து, இது குறித்த சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : May 7, 2025, 04:06 PM IST
  • இந்தியா ஆரம்பித்த ஆப்ரேஷன் சிந்தூர்
  • 1971ல் நடந்த போர்
  • 54 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விஷயம்..
Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?

Operation Sindoor Latest Update : 2 வாரங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் குறித்தும், இந்தியா 54 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த முடிவு குறித்தும் காணலாம்.

Add Zee News as a Preferred Source

ஆப்ரேஷன் சிந்தூர்:

மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது. நள்ளிரவு 1.05 மணிக்கு ஆரம்பித்து 1.30 மணிக்குள்ளாக 25 நிமிடங்களில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெயிஷ்-இ-முகம்மது ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு உரிய 9 இடங்களில் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் சுமார் 70 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

54 ஆண்டுகளுக்கு பிறகு..

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம், பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதும் தீராக்கதை. இதே போல, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த ஒரு பெரிய போர் இன்று வரை வரலாற்று சுவடிகளில் பெரிய அங்கமாக இருக்கிறது. இண்ட போர் நடந்த 13 நாட்களிலேயே, இந்தியா இதில் வெற்றிக்கண்டதாக கூறப்பட்டது. இதில், ராணுவத்தினர் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

அந்த 1971ஆம் ஆண்டு போரின் போது, தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படைகளையும் இந்தியா உபயோகித்தது. அதன் பிறகு, தற்போது 54 ஆண்டுகள் கழித்து ஆப்ரேஷன் சிந்தூரின் போது மீண்டும் முப்படைகளை உபயோகித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன?

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேசி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினர். அப்போது, அவர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தனர்.

பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தான், தனது நாடு முழுவதும் தீவிரவாத குழுக்களுக்காக ஆட்சேர்ப்பு மையங்களை வைத்து வருவதாகவும், ஏவுதளங்களை வைத்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் மேற்கொள்ள இருப்பதாக உளவுத்துறை கூறியதை அடுத்து, இதனை தடுக்க இந்த கட்டாய தாக்குதலானது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். அதன்படி, தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறியிருந்தனர். 

பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம்..

இந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் 2 வகையான ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வான்வழி தாக்குதல் ஒரு சேர நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 1947 போர் முதல் ஆப்ரேஷன் சிந்தூர் வரை: IND vs PAK மோதல் வரலாறு - ஒரு பார்வை

மேலும் படிக்க | Operation Sindoor : பாகிஸ்தானை அதிரவைத்த 25 நிமிடங்கள் குறித்த மிக முக்கிய தகவல் - பரபரப்பான நிமிடங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News