ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பம் பலி: மசூத் அசாருக்கு என்ன ஆனது?

Operation Sindoor Latest news: எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் வீட்டின் மீது இந்திய விமானப்படை அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2025, 12:58 PM IST
  • மசூத் அசார் வீட்டை குறி வைத்து தகர்த்த இந்திய ராணுவம்.
  • யார் இந்த மசூத் அசார்?
  • இந்தியாவில் நடந்த பல தாக்குதல்களின் மாஸ்டர்மைண்ட்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பம் பலி: மசூத் அசாருக்கு என்ன ஆனது?

Operation Sindoor Latest news: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

Add Zee News as a Preferred Source

நான் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்: மசூத் அசார்

இதற்கிடையில், "இந்தத் தாக்குதலில் நான் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று கூறி பயங்கரவாதி மசூத் அசார் ஒரு கடிதம் வெளியிட்டதாக ஒரு தகவல் பரவி வருகின்றது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை.

விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசாரின் குடும்பம்

இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசாரின் முழு குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா, மே 7, அதிகாலை 1.30 மணிக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடுத்தி அவற்றை அழித்தது. பஹவல்பூர், முரிட்கே, சவாய், குல்பூர், பிலால், கோட்லி, பர்னாலா, சர்ஜால் மற்றும் மஹ்முனாவை இந்தியா தாக்கியது. மசூத் அசாரின் குடும்பத்தினர் பஹாபல்பூரில் வசித்து வந்தனர். இந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

எனினும், இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசார் வீட்டில் இருந்தாரா என்ற தகவலும் இன்னும் தெளிவாகவில்லை.

மசூத் அசார் வீட்டை குறி வைத்து தகர்த்த இந்திய ராணுவம்

எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் வீட்டின் மீது இந்திய விமானப்படை அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர் கொல்லப்பட்டனர். மசூத் அசாரின் முழு குடும்பத்தினரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ​​அந்தப் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டு, குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த தாக்குதலகள் நடந்தபோது மசூத் அசார் வீட்டில் இல்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவின் விமானத் தாக்குதல் நடந்த நேரத்தில், மசூத் அசாரின் மூத்த சகோதரி, மௌலானா கஷ்ஃபின் முழு குடும்பத்தினரும், முஃப்தி அப்துல் ரவூப்பின் பேரனும், மூத்த மகள் ஷாஹீத் பாஜி சாதியாவும் அவரது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. 

யார் இந்த மசூத் அசார்?

மசூத் அசார், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவை நிறுவி அதற்கு தலைமை வகிக்கும் ஒரு பயங்கர தீவிரவாதி. அவர் 1968 -இல் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் பிறந்தார். அவர் ஒரு தீவிர இஸ்லாமியவாதி மற்றும் பயங்கரவாதி. முதன்மையாக அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தீவிரமாக செயல்பட்டார். 

இந்தியாவில் நடந்த பல தாக்குதல்களின் மாஸ்டர்மைண்ட்

2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவர் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படுகிறார். 1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்டபோது, ​​பயணிகளை விடுவிப்பதற்காக அவரையும் மற்ற இரண்டு பயங்கரவாதிகளையும் விடுவிக்குமாறு பயங்கரவாதிகள் கோரியதன் விளைவாக, வேறு வழியில்லாமல் அவர் இந்தியாவால் விடுவிக்கப்பட்டார். மே 1, 2019 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது.

மேலும் படிக்க | யார் இந்த IAF விங் கமாண்டர் வியோமிகா சிங்? சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர் எப்படி சாத்தியமானது? 7 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகள் அழிக்கப்பட்டன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News