India Pakistan War Ceasefire: ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில்ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், விமான நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஏர் வைஸ் மார்ஷல் ஏ.கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் உள்ளிட்டோர் டெல்லியில் இன்று (மே 12) செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் இன்று (மே 12) உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவம் பகிர்ந்து கொண்ட வீடியோவில் பாகிஸ்தானின் மிராஜ் விமானத்தின் சிதறிய உதிரிபாகங்களை காண முடிந்தது.
ஏர் வைஸ் மார்ஷல் ஏ.கே.பாரதி பேசுகையில், "எங்களது போரை-எதிர்கொள்ளும் அமைப்புகள் சோதனை காலகட்டத்தை கடந்து, எதிரிகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு வீழ்த்தின. மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்ஸ உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் அற்புதமான செயல்திறன் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் ராணுவ ஆதரவு கொள்கை காரணமாக மட்டுமே சக்திவாய்ந்த வான் தடுப்பு பாதுகாப்பு சூழலை ஒன்றிணைத்து செயல்படுத்துவது சாத்தியமானது" என்றார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில், இந்திய ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்களின் படங்களையும் ஏர் வைஸ் மார்ஷல் ஏ.கே.பாரதி பகிர்ந்திருந்தார். இந்தியாவின் மோதல் என்பது பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே, பாகிஸ்தான் அரசு இதில் தலையிட்டது பரிதாபகரமானது என்று ஏ.கே. பாரதி தெரிவித்தார். மேலும் அவர்,"இந்தியாவின் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்பாட்டில் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் எதிர்கால பணிகளுக்கும் தயாராக உள்ளன. எங்கள் அனைத்து ராணுவ தளங்களும், உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியா விருப்பப்படி பதில் தாக்குதல் தொடங்கும்" என்றார்.
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பாகிஸ்தானின் மிக முக்கிய நூர் கான் விமான தளத்தை தாக்கி அழித்த வீடியா இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ஏர் வைஸ் மார்ஷல் ஏ.கே. பாரதி பகிர்ந்துகொண்டார். மேலும், இந்தியா மீதான தாக்குதலின் போது பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட, சீன தயாரிப்பான PL-15 ஏவுகணை முறியடிக்கப்பட்டது, இதன் சிதறிய உதிரிபாகங்களை இந்திய ராணுவம் பகிர்ந்தது. இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட துருக்கியின் YIHA மற்றும் சோங்கர் டிரோன்களின் சிதைவுகளின் புகைப்படங்களும் காட்டப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் எத்தனை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற கேள்விகளுக்கு முழு தகவல்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது என பதில் அளிக்கப்பட்டது. பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஏராளமான டிரோன்கள், ஆளில்லா போர் வான்வழி வாகனங்கள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எதிர்-யுஏஎஸ் அமைப்புகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன என ஏ.கே. பாரதி தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ