)
P Chidambaram Accusing Election Commission: பீகார் சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது என்றாலும் இப்போதே தேசிய அரசியலில் அதிகம் பேச்சுக்குள்ளாவதும் அதுவாகவே உள்ளது. அதற்கு முக்கிய காரணம், பீகார் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் சிறப்பு தீவிர திருத்தம் ஆகும்.
இது பீகார் வாக்காளர் பட்டியலில் மட்டுமின்றி வருங்காலத்தில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் இந்த சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாட்டில் எந்தளவிற்கு தாக்கம் செலுத்தும் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 6.5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும், இது ஆபத்தானது என்றும் சட்டவிரோதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
P Chidambaram: தமிழக வாக்காளர்களின்...
தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் தேர்தல் தன்மையையே மாற்றும் விதத்தில் செயல்படுகிறது என்றும் பீகாரில் தற்போது செய்யப்படும் சிறப்பு தீவிர திருத்தம் நாளுக்கு நாள் வினோதமாகி வருகிறது.
இதுகுறித்து ப. சிதம்பரம் அவரது X பக்கத்தில் இன்று காலை போட்டியிருந்த பதிவில், "பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது குறித்து வெளியாகும் செய்திகள் ஆபத்தானவை மற்றும் வெளிப்படையாக சட்டவிரோதமானதானதாகும்.
P Chidambaram: வாக்களிக்க ஊர் திரும்பக் கூடாதா...?
அவர்களை நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும். மேலும் அவர்கள் விரும்பும் அரசை தேர்ந்தெடுக்கும் தமிழ்நாட்டு வாக்காளர்களின் உரிமையில் தலையிடுவதாகும்.
வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி பீகார் (அல்லது அவரது சொந்த மாநிலம்) மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏன் ஊர் திரும்பக்கூடாது?. சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளி பீகாருக்குத் திரும்பவில்லையா?
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பீகாரில் (அல்லது வேறு மாநிலத்தில்) அத்தகைய வீடு உள்ளது. அவர்களை தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?.
P Chidambaram: அதிகார துஷ்பிரயோகம்
புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வாழ்ந்தால், புலம்பெயர்ந்த தொழிலாளியை தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என்று எவ்வாறு கருத முடியும்? தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது" என கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு போட்ட பதிவில், "ஒவ்வொரு இந்தியருக்கும் தனக்கு நிரந்தர வீடு உள்ள எந்த மாநிலத்திலும் வாழவும் வேலை செய்யவும் உரிமை உண்டு. அது வெளிப்படையானது மற்றும் சரியானதும் கூட...
P Chidambaram: 30 நாள்களில் எப்படி?
பீகாரின் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல லட்சம் பேர், அவர்கள் மாநிலத்தில் இருந்து நிரந்தரமாக இடம்பெயர்ந்தனர் என்பதற்காக அவர்களை விலக்க வேண்டும் என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் எவ்வாறு வந்தது? அதுதான் கேள்வி.
ஒரு நபர் ஒரு மாநிலத்தில் இருந்து நிரந்தரமாக இடம்பெயர்ந்தார் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், ஒவ்வொரு வழக்கிலும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டாமா?.
37 லட்சம் பேர் சம்பந்தப்பட்ட அத்தகைய விசாரணை 30 நாட்களில் எவ்வாறு நடத்தப்பட்டிருக்க முடியும்?. பெரும் வாக்குரிமை பறிப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்சினை, அதனால்தான் உச்ச நீதிமன்றம் மனுக்களை விசாரித்து வருகிறது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ