நேற்று சச்சின் பைலட் மற்றும் அவரது முகாமின் 18 எம்.எல்.ஏக்கள், மாநில சட்டமன்ற சபாநாயகர் வழங்கிய தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை  அணுகி, மனௌ தாக்கல் செய்துள்ள நிலையில்,  இரு காங்கிரஸ் தலைவர்களுக்கிடையில் நேற்று இரவு உரையாடல் நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Amazon, Walmart நிறுவனக்களுக்கு சவாலாக உருவெடுக்கும் Reliance …!!!


புதுடில்லி: கிளர்ச்சி செய்த  காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டை ராஜஸ்தான் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், மாநில பிரிவு தலைவர் பதவியிலிருந்து  காங்கிரஸ் கட்சி நீக்கியது. இந்நிலையில்,  நேற்று இரவு ஒரு எதிர்பாராத  நடவடிக்கையாக, மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை  தொபை பேசி சச்சின் பைலட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்தால், அவரது கிளர்ச்சி செய்தது மறக்கப்படும்ட


நேற்று மாலை சச்சின் பைலட் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  நீதிமன்றம்  விசாரணையை ஒத்திவைத்தது.  பின்னர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு மனுவை விசாரிக்கும்.


 இந்நிலையில், தங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை  நடந்தது  உண்மை தான் என பல்வேறு செய்தி சேனல்களிடம் உறுதிப்படுத்திய சிதம்பரம், “நாங்கள் பேசினோம். அவரை சந்திக்க தலைமை அழைத்து என்றும், அனைத்து பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் நான் மீண்டும் வலியுறுத்தினேன். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் அவருக்கு அறிவுறுத்தினேன் ” எனக் கூறினார்.


ALSO READ | வீடு தேடி வரும் மருத்துவமனை…. கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!!


பைலட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்த போதிலும்,  காங்கிரஸ், அரசியல் நெருக்கடி தொடங்கியதிலிருந்தே, கட்சியின் கதவுகள் எப்போதும் அவருக்காக திறந்திருக்கும் என்றும், ‘ஒரு குடும்பத்திற்குள் உள்ள பிரச்சினைகள் குடும்பத்தினரிடம் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும்’ என்றும் பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்ததக்கது.


சிதம்பரத்தைத் தவிர, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவும், சச்சின் பைலட்டுடன் பலமுறை பேசியுள்ளார். இருப்பினும், ராகுல் காந்தி இன்னும் நேரடியாக பைலட்டை அணுகவில்லை. ஆனால் மார்ச் மாதத்தில், ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் மத்திய பிரதேசத்தை மார்ச் மாதத்தில் பாஜகவிடம் இழந்த பின்னர் அவரைத் தக்க வைத்துக் கொள்வதில் காங்கிரஸ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.