இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்

BSF Constable Arrest : இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை பாகிஸ்தான் சிறைபிடித்திருப்பது இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 24, 2025, 06:47 PM IST
  • பிஎஸ்ப் வீரரை கைது செய்த பாகிஸ்தான்
  • தவறுதலாக எல்லைக் கோட்டை கடந்துள்ளார்
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்
இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்

Indian BSF Constable Arrested by Pakistan : ஜம்மு - காஷ்மீர், பகல்காம் சுற்றுலாதளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே உட்சக்கட்ட பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது. புதன்கிழமை அன்று சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்தபோது பாகிஸ்தான் ரேஞ்சர்கள் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கான்ஸ்டபிளை கைது செய்திருக்கின்றனர். பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் அருகே உள்ள சர்வதேச எல்லையை தற்செயலாகக் கடந்தபோது தான் இந்த கைது சம்பவம் நடந்திருக்கிறது. ஜீரோ லைன் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பயிர்களை அறுவடை செய்து கொண்டிருந்த இந்திய விவசாயிகளைக் கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

அப்போது அங்குவந்த பாகிஸ்தான் ரேஞ்சர்கள் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரரை கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட பிகே சிங், பிஎஸ்எஃப்-ன் 182வது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஆவார். அந்த நேரத்தில் தனது சீருடையில் தனது சர்வீஸ் ரைஃபிளை ஏந்திச் சென்றவாறு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் எல்லை வேலிக்கும் ஜீரோ லைனுக்கும் இடையில் அமைந்துள்ள வயல்களுக்குள் அருக்கும் என்ட்ரி பாயிண்டான கேட் எண் 208/1 அருகே விவசாயிகளுடன் அவர் சென்று கொண்டிருந்திருக்கிறார். 

அப்போது அங்கு நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக, கான்ஸ்டபிள் பிகே சிங், எல்லையைத் தாண்டிச் சென்று ஒரு மரத்தின் நிழலின் கீழ் ஓய்வெடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது, அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவரைக் உன்னிப்பாக கவனித்து கைது செய்திருக்கின்றனர். ஆன்றால், எல்லைக்கோடு அருகே வசிக்கும் மக்கள், பாதுகாப்பு படையினர் தற்செயலாக எல்லையை கடப்பது ஒன்றும் அசாதாரணமானது அல்ல, சில சமயங்களில் நடக்கக்கூடியது தான் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

அப்படி கைது செய்யப்படும்போது வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி கைது செய்யப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் எல்லைப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் என இரு தரப்பிலுமே தற்செயலாக எல்லையை கடந்தவர்களுக்கு இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஒருவர் பேசும்போது, இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே தவறுதலாக எல்லையைக் கடந்தவர்களை திருப்பி அனுப்புவதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. அதனைப் பின்பற்றி இருநாட்டு தரப்பிலும் கைது செய்யப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அதேபோல் இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார் என கூறியுள்ளார்.

ஆனால், வழக்கமான நாட்களில் நடக்கும் சம்பங்களுக்கும், இப்போது இந்தியா -பாகிஸ்தான் இடையே நீடிக்கும் உட்சக்கட்ட பதற்றத்துக்கும் உள்ள நிலைமை என்பது வேறாக இ,ருக்கிறது. பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை கொடுக்க தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டிருக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகே சிங் திருப்பி அனுப்பப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | “தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்” பல்ஹாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..

மேலும் படிக்க | பகல்காம் தாக்குதல்: 'இந்தியா போடும் நாடகம்' வீடியோ போட்ட லக்ஷர்-இ-தொய்பா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News