பாகிஸ்தான் இன்றும் டிரோன் தாக்குதல் முயற்சி... உஷார் நிலையில் ஜம்மு, பஞ்சாப்!

India Pakistan War: ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானை சேர்ந்த மொத்தம் 11 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல் முயற்சி, இந்தியாவால் முறியடிக்கப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : May 9, 2025, 10:48 PM IST
  • ஜம்மு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் 8 பகுதிகளில் தாக்குதல் முயற்சி.
  • சைரன் ஒலிகளும் எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
பாகிஸ்தான் இன்றும் டிரோன் தாக்குதல் முயற்சி... உஷார் நிலையில் ஜம்மு, பஞ்சாப்!

India Pakistan War: ஜம்மு காஷ்மீரின் 8 இடங்களை நோக்கி பாகிஸ்தான் தொடுத்த டிரோன் தாக்குதல்களை தற்போது முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி, பஞ்சாபில் இரண்டு பகுதிகளிலும், ராஜஸ்தானில் ஒரு பகுதியிலும் டிரோன் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

நேற்றை போலவே பாகிஸ்தான் இன்றும் தொடர் டிரோன் தாக்குதல் மேற்கொண்டு வருவதால் அங்கு பதற்றம் அதிகமாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஜம்மு, சம்பா, உரி, பூஞ்ச், ஹந்த்வாரா, ரஜோரி, நவ்காம் மற்றும் குப்வாரா பகுதிகளில் டிரோன் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. பஞ்சாபில் பதான்கோட், அம்ரித்சர் மற்றும் ராஜஸ்தானில் பொக்ரான் ஆகிய இடங்களிலும் பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் தொடுத்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து இரண்டாவது நாளாக பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவ தளங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் முயற்சியை மேற்கொள்கிறது. இதையடுத்து, பதான்கோட் மற்றும் ஜம்முவில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. சைரன் ஒலிகளும் இரு நகரங்களிலும் எழுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம், மக்கள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேய இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

ஸ்ரீநகரிலும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. அமிர்தசரஸில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. டிரோன் நடமாட்டம் காணப்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கு முன் அங்கு முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பாகிஸ்தான் நேற்று மேற்கொண்ட டிரோன் தாக்குதல் முயற்சி குறித்து இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தான் பயன்படுத்தியது எகிப்து நாட்டு டிரோன் என்றும் இவை பெரும்பாலும் உளவு பார்க்கும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 300 - 400 டிரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக இந்தியா தெரிவித்திருந்தது. ஆனால் அனைத்தும் இந்திய வான் தடுப்பு அமைப்பால் முற்றிலும் முறியடிக்கப்பட்டது. டிரோன் மட்டுமின்றி தற்போது எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பீரங்கித் தாக்குதலையும் பாகிஸ்தான் தொடர்ச்சியாக மேற்கொண்டது. தொடர்ச்சியாக போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறி வருகிறது. 

இன்று முதலில் 11 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை தொடங்கியது. தற்போது மொத்தம் 20 நகரங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. நேற்று வடக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த 36 நகரங்களில் உள்ள ராணுவ தளங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சி எடுத்தது. தற்போதைய தகவலின்படி, பஞ்சாப் ஃபெரோஸ்பூர் நகரில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் படிக்க | இந்தியா-பாகிஸ்தான்: விமான நிலையங்கள் மூடல்; அமைச்சகம் உத்தரவு

மேலும் படிக்க | எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்... ஜம்மு காஷ்மீரில் Blackout... நாட்டின் பல மாநிலங்களில் உஷார் நிலை

மேலும் படிக்க | 11 மணிநேர அமைதிக்கு பின்... தாக்குதலை தொடங்கிய பாக்., - ரெடியாகும் இந்தியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News