130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம்.. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்!

இந்தியாவை நோக்கி மட்டும் 130 அணு ஆயுதங்களை வைத்துள்ளோம் என பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 27, 2025, 06:27 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்
  • இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் அமைச்சர்
130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம்.. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்!

ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தளம் பகல்காம். இது மினி சுதர்லாந்து என அழைக்கப்படுகிறது. இச்சூழலில் பகல்காமின் பைசரன் என்ற புல்மேடு பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி திடீரென பயங்கரவாதிகள் நுழைந்து தூப்பாக்கிசூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 22 சுற்றுலா பயணிகள் சூட்டுக் கொல்லப்பட்டனர். 12 பேர் கயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் மேற்கொண்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Add Zee News as a Preferred Source

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. முதலாவதாக இந்தியா பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதேபோல் பாகிஸ்தானியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுதல், பாகிஸ்தானியர்களின் விசா வழங்குவதை ரத்து செய்தல், அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான், இந்தியாவை நோக்கி மட்டும் 130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிந்து நதி நீரை நிறுத்தி வைத்தால் இந்தியா முழுமையாக போருக்கு தயாராவதாக அர்த்தம். நாங்கள் இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம். அதில் கோரி, ஷாகின் மற்றும் காஸ்னவி உள்ளிட்ட ஏவுகணைகள் உள்ளன. மொத்தம் 130 அணுஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் இந்தியாவுக்காக வைத்துள்ளோம். 

எங்களிடம் உள்ள ராணுவ ஆயுதங்கள், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் என அனைத்தையும் வெறும் காட்சிப் பொருளாக மாடும் நாங்கள் வைத்திருக்க வில்லை.  நாங்கள் எங்கெல்லாம் அணுஆயுதம் வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன். எங்களிடம் பாலிஸ்டிங் ஏவுகணை உள்ளது. அது உங்களை இலக்காக கொண்டு தாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தானில் ராணூவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் வலிமை குறைவாகவே உள்ளது. ஆள் பலமாக இருந்தாலும் சரி ஆயுத பலமாக இருந்தாலும் சரி அனைத்திலுமே இந்தியா மேலோங்கி இருக்கிறது. பாகிஸ்தானை போல நம்மிடமும் அணுஆயுதங்கள் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் எந்த நாடும் அணுஆயுதத்தை பயன்படுத்தவில்லை. சொல்லப்போனால் அணுஆயுதம் ஒரு காட்சிப்பொருளாகவும் மிரட்டல் விட மட்டுமே இருந்து வருகிறது. 

மேலும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. அரபிக்கடலில் ஏவுகணை சோதனை! வீடியோ

மேலும் படிங்க: பாகிஸ்தானுடனான வர்த்தக உறவில் விரிசல்! இந்தியாவில் என்னென்ன பொருட்களின் விலை உயரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News