பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியா Operation Sindoor-ஐ கையில் எடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் முதல் தாக்குதலாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கி வீழ்த்தியுள்ளன. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் இருநாட்டிற்கும் இடையில் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகளிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி என்று தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | தயார் நிலையில் இந்தியா! பாகிஸ்தான் எந்த எந்த பகுதியில் தாக்குதல் நடத்தும்?
பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி உள்ள நிலையில், பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொதுமக்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் பாகிஸ்தானின் JF-17 போர் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்னூர் பகுதியில் உள்ள சுங்கலுக்கு அருகில் உள்ள ராஜா சக் என்ற கிராமத்தில் பாகிஸ்தானின் JF-17 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
BREAKING: Reports a PAF JF-17 pilot killed after failing to eject in time. Awaiting official details. #IndiaPakistanWar #jf17 #opreationsindoor pic.twitter.com/Q3CUboNocw
— Arpit wagh (@Arpitwagh918220) May 6, 2025
In a major escalation of hostilities between India and Pakistan, a Pakistani #JF17 fighter jet has reportedly been shot down by Indian forces in the Akhnoor region of Jammu and Kashmir. The JF-17 reportedly crashed in Raja Chak village near Sungal in the #Akhnoor region of… pic.twitter.com/xT4KBdrdpZ
— Madhuri Adnal (@madhuriadnal) May 6, 2025
இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட மாநிலங்களில் சில பகுதிகளில் விமானங்கள் சேவை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அடுத்த அப்டேட் வரும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது பாகிஸ்தான் அரசு போர் ஒப்பந்தந்தை மீறி காஷ்மீரில் உள்ள கன்னாஹ், மென்திர், டாக்கி ஆகிய பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானின் JF-17 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இது நான்காவது தலைமுறை போர் விமானம் ஆகும். பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து இந்த JF-17 விமானத்தை உருவாக்கி உள்ளனர். வான் வெளி தாக்குதலுக்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லை பகுதிகளில் இந்தியா பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | India Attack Pakistan: விமானங்கள் இயங்காது! பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









