ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மெண்டார் செக்டரில் அமைத்துள்ள எல்லை கோட்டை தண்டி இன்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை மெண்டார் செக்டரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 45 வயதுடைய பெண் ஒருவர் பலியானார். இந்த பெண்ணின் பெயர் ரீகியா பேகம். இவர் மெண்டார் செக்டர் பகுதியில் வசித்து வந்தார் என போலீஸ் அதிகாரி ரியாஸ் டன்ட்ரே தெரிவித்தார்.


இதேபோல நேற்று இரவு வடக்கு காஷ்மீரின் கலரோஸ் குப்வாரா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்.ஆர்) தலைமையகத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நேற்று நடந்த இந்த தாக்குதலில், ஒரு இராணுவ வீரரை காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.