Patanjali Big Herbal And Food Park : பதஞ்சலி நிறுவனம், இந்தியாவின் மெகா உணவு மற்றும் மூலிகை பூங்காவை திறக்க இருக்கிறது. இதற்கு ஆரம்பகால முதலீடாக சுமார் ரூ.700 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடு, இன்னும் ரூ.1,500 கோடியாக விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரத்தையும், இந்த உணவு பூங்கா அமைய இருக்கும் இடத்தையும் இங்கு பார்ப்போம்.
பதஞ்சலியின் மூலிகை பூங்கா!
பதஞ்சலியின் இந்த உணவு பூங்கா, இந்தியாவின் பழங்கள் மற்றும் காய்கறிகள் பதபடுத்துதலுக்கான முக்கிய மையமாக மாற இருக்கிறது. பழச்சாறு உற்பத்தி, பழ கூழ் (Pulp), பேஸ்ட் ஆகியவற்றை உற்பத்தி செய்ய உள்ளது. இது முக்கியமாக நாக்பூரின் ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை மையமாக வைத்து உருவாக உள்ளது.
சிட்ரஸ் பழங்களை தாண்டி மாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி மற்றும் கேரடாகியவற்றையும் இந்த பூங்கா உற்பத்தி செய்ய இருக்கிறது. உலகளாவிய தரத்தில் இதனை தயாரிக்க, அதிநவீன பேக்கஜிங் அம்சங்களும் இதில் இடம்பெற இருக்கின்றன.
என்ன ஸ்பெஷல்?
இந்த பூங்காவிற்கான முதலீடு, உற்பத்தி திறனை அதிகமாக்குவதோடு பிராந்திய உள்கட்டமப்பை மேம்படுத்தவும் வழிவகுக்குமாம். அதே போல, பதஞ்சலி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து இவற்றை வாங்கி இயற்கை விவசாயத்தை பின்பற்ற ஊக்குவிக்கிறது. இதனால் விவசாயிகள் பன்மடங்காக பயனடைகின்றனர்.
பதஞ்சலியின் இந்த மெகா உணவு பூங்கா, விவசாயத்தை மேம்படுத்துவதோடு மகாராஷ்டிராவின் விதர்பாவை பெரிய உற்பத்தி மையமாக மாற்றி விடும். இதனால், அந்த இடத்தின் பொருளாதாரம் வளர்வதோடு, அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை மேம்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவில் ஏழ்மையாக உள்ள டாப் 10 மாநிலங்கள் எவை?
மேலும் படிக்க | விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பதஞ்சலி! புதிய திட்டம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









