)
Patna Engineer Burnt More Than 3 Crores : வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு வருகிறார்கள் என்றால், உடனே பெரும் செல்வந்தர்கள் அவர்களின் பணத்தை யாரிடமாவது கொடுத்து அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ள சொல்வதுண்டு. அப்படித்தான் பல சினிமாக்களிலும் காண்பித்து இருக்கின்றனர். ஆனால் இங்கு ஒருவர், தான் மாட்டி விடக்கூடாது என கோடிக்கணக்கான பணதnதை எரித்து கழிவறையில் கொட்டி இருக்கிறார். இப்படி பணம் எரிந்த செய்தியை கேட்டு பலருக்கும் வயிறு எரிந்து வருகிறது. இதன் பின்னணி என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
பீகார் மாநிலத்தில், ஊரகப் பணிகள் துறையில் வினோத் ராய் என்பவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். சீதா மார்ஹி மற்றும் மதுபானி உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் நடைபெறும் பாலங்கள் கட்டும் பணி மற்றும் சாலைகள் சீரமைக்கும் பணி மேலாண்மையை கவனித்து வந்தார். இவர், ஒப்பந்தக்காரர்கள் கட்டிடம் இருந்து லஞ்சம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவரது லஞ்ச கையாடல் குறித்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரிதமாக நடவடிக்கை எடுத்த அவர்கள், இவர் வீட்டில் சோதனை செய்ய முடிவு செய்து இருக்கின்றனர்.
தன் வீட்டிற்கு அதிகாரிகள் ரேட் வரப்போவதை முன்கூட்டியே அறிந்த வினோத் ராய், வீட்டில் இருக்கும் லஞ்சப் பணத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்து இருக்கிறார். அந்தப் பிளானின் ஒரு பகுதியாக, தனது மனைவி பப்லி ராயுடன் சேர்ந்து, இரவு முழுவதும் முழித்து ரூபாய் நோட்டுகளை எரித்து சாம்பல் ஆக்கி இருக்கின்றனர். அதன் பிறகு அதனை கழிவுநீர் குழாய் வழியாக ஊற்றி இருக்கின்றனர். தொடர்ந்து இப்படி ரூபாய் நோட்டுகளை எரித்து அதை கழிவுநீர் குழாயில் போட்டு வந்ததால், அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் பணத்தை எரிக்க முடியாமலும் அதை எங்கு கொட்டுவது என்று தெரியாமலும் அவஸ்தை பட்டிருக்கின்றன. அதற்குள் அதிகாரிகள் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து சோதனையை தொடங்கி இருக்கின்றனர்.
திடுக்கிட்ட அதிகாரிகள்..
ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கழிவினைக் குழாயில் சிக்கிருந்ததை கண்ட அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதை பார்த்து அவர்கள் இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வரை இருந்திருக்கலாம் என்று கணித்திருக்கின்றனர். வீட்டில் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், பாதி எரிந்த நிலையில் ரூ.20 லட்சம் பணமும், ரூ.40 லட்சம் ரொக்கமும், லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகளும், 100 கோடி மதிப்புள்ளானா சொத்து ஆவணங்களும் கிடைத்திருக்கின்றது. கூடவே, விலைமதிப்பு மிக்க கைகடிகாரங்கள், 15 வங்கி கணக்கு புத்தகங்கள், காப்பீட்டு பாலிசிகள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணை..
மேற்கூறிய சம்பவம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் எரிக்கப்பட்ட இடங்களில் தடவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர். வினோத் ராய் மற்றும் அவரது மனைவி பப்லி ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கு செல்லாமல் தப்பிப்பதற்காக இவர்கள் எடுத்த பணத்தை எரிக்கும் முயற்சி, கடைசியில் அவர்களை இன்னும் கடும் தண்டனைக்கு ஆளாக்கியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ