பெங்களூருவில்  35 வயதான பிசியோதெரபிஸ்ட் ஒருவர், 71 வயதான அவரது தாய்க்கு 30 பிபி மாத்திரைகளை கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயுடன், அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், திங்கள்கிழமை அதிக பிபி மாத்திரைகளை கொடுத்தப் பின்,  வீட்டில் மயங்கி கிடந்த அவரை கழுத்தை நெரித்து கொன்று,  அவரது உடலை சூட்கேஸில் அடைத்தார். உடலை ஒரு சூட்கேஸில் வைத்து, ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் போலீஸாரிடம் எடுத்துச் சென்று, "நான் என் அம்மாவைக் கொன்றுவிட்டேன் ... உடல் சூட்கேஸில் உள்ளது" என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோனாலி சென் கொடுத்த வாக்குமூலம்


கொலையாளிகளை துப்பறிந்து தேடி கண்டுபிடித்து பழக்கம் கொண்ட காவல் துறையின் முதலில், ஏழு வயது மகனின் தாயான சோனாலி சென் கொடுத்த வாக்குமூலத்தை நம்பவில்லை. சோனாலி முதலில் அணுகிய மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் குமார், "எல்லாவற்றையும் புரிந்து கொள்ள போராடிய" பலரில் ஒருவர். "சூட்கேஸ் திறக்கப்படுவதை நாங்கள் ஆர்வத்துடன் பார்த்தோம். உள்ளே ஒரு வயதான பெண்மணியின் உடல் இருந்தது," என்று ஒரு போலீஸ்காரர் அதிர்ச்சியுடன் கூறினார், சோனாலி அமைதியாக குமாரின் அறையின் கதவுக்கு அருகில் நின்று நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கண்டார். பின்னர் குமார் ஆம்புலன்சை வரவழைத்து, கொல்லப்பட்ட பியா பாலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி எஃப்ஐஆர் பதிவு செய்தார்.


மேலும் படிக்க | டிவி சீரியலால் வந்த வினை... மனைவியை துபாக்கியினால் சுட்ட கணவன்!


தாயைக் கொன்ற பெண்


சோனாலியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பிளாட்டில் உள்ள அறை ஒன்றில் நடந்த கொலை  தெரியவில்லை. அவரது கணவர் சுப்ரோதோஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரது மகனும் மாமியாரும் மற்ற அறையில் இருந்தனர். பிபி மாத்திரகள் கொடுத்த பின்னும் தாய் இறக்காமல், மூச்சு இருந்ததால்,  அவரை கழுத்தை நெரித்து கொன்ற பிறகு, ஒரு மணி நேரம் உடலின் அருகில் அமர்ந்து சரணடைய முடிவு செய்ததாக சோனாலி போலீசாரிடம் கூறினார். பின்னர் சூட்கேஸை எடுத்து அதில் அம்மாவின் உடலை வைத்து கால்களையும் கைகளையும் மடக்கி உடலை அதில் திணித்தாள்.


விரக்தியுடன் பேசிய சோனாலியின் தாய்


சோனாலி, சுப்ரோதோஷ், அவர்களது மகன் மற்றும் அவரது மாமியார் 2017 முதல் குடியிருப்பில் வசித்து வந்தனர். முன்பு கொல்கத்தாவில் வசித்து வந்த சோனாலியின் தாய் , 2018 இல் அவர்களுடன் குடியேறினார். சோனாலி, தனது  தாய் மற்றும் மாமியாருடன் அன்றாடம் சண்டைகள்  போடுவார் என கூறினார். ஞாயிற்றுக்கிழமை இரவு, சோனாலியின் தாய் விரக்தியுடன், சோனாலியிடம், அத்தகைய மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை விட மரணத்தை விரும்புவதாகக் கூறினார். மறுநாள் காலை அவள் அதே போன்று கூறியதால், கோபமடைந்த சோனாலி, பிபி மாத்திரைகளை தாயிடம் கொடுத்து, "அதை ஒரே மூச்சில் விழுங்குங்கள்" என்று கேட்டுவிட்டு, தாய் அனைத்தையும் உறுத்துவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். "என அம்மா படுக்கையில் விழுந்து அரை மயக்கத்தில் இருந்தாள். அவள் இறந்துவிடுவாள் என்று நினைத்தேன். அவள் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதனால் கடைசியாக, நான் என் துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெரித்து கொன்றேன்," என்று சோனாலி போலீசாரிடம் கூறினார்.


மேலும் படிக்க | ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ டிவிட்டரில் டிரெண்ட் செய்த அதிமுக - காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ