500 ரூபாய் நோட்டுக்கும் தடையா...? அதுவும் 2026 மார்ச் முதலா...? மத்திய அரசு அப்டேட்!

500 Rupees Notes: வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 7, 2025, 03:23 PM IST
  • 2016இல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது.
  • 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை.
  • தற்போதைய தகவலால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
500 ரூபாய் நோட்டுக்கும் தடையா...? அதுவும் 2026 மார்ச் முதலா...? மத்திய அரசு அப்டேட்!

500 Rupees Notes Latest Updates: 2026ஆம் ஆண்டில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படும் என யூ-ட்யூப் வீடியோ ஒன்று வைரலானது. இதனால் கடந்த சில நாள்களாகவே மக்கள் இடையே பெரும் குழப்பமும், அச்சமும் நிலவி வந்தது எனலாம்.

Add Zee News as a Preferred Source

500 Rupees Notes: யூ-ட்யூப் வீடியோவால் பரபரப்பு

Capital TV என்ற யூ-ட்யூப் சேனல் கடந்த ஜூன் 2ஆம் தேதி அன்று அந்த வீடியோ போடப்பட்டுள்ளது. அதில் வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றார். சுமார் 12 நிமிடங்கள் வரை போடப்பட்ட இந்த வீடியோ 5 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்த விளக்கத்தை தற்போது அளித்துள்ளது.

500 Rupees Notes: மத்திய அரசு விளக்கம்

அதாவது, இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வரை அப்படி எந்தவித அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து PIB Fact Check எனும் மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்பு X பக்கத்தில் கடந்த ஜூன் 3ஆம் தேதியே உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது.

500 Rupees Notes: மக்கள் இதை நம்ப வேண்டாம்...

அதில்,"500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்படவில்லை, அவை சட்டப்பூர்வமான பணமாகவே தொடரும்" என தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற தவறான தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. செய்திகளை நம்பும் முன்னரும் அல்லது பகிர்வதற்கு முன்னரும் எப்போதும் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அதை சரிபார்க்கவும் என்றும் தெரிவித்துள்ளது.

500 Rupees Notes: பணமதிப்புழப்பு முதல்...

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, புதியதாக 2000 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளும் புதிய வடிவில் புழக்கத்திற்கு வந்தன. இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஆர்பிஐ அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மக்கள் மாற்றிக்கொண்டனர். 

500 Rupees Notes: புழக்கத்தில் இல்லாத ரூ.2000 நோட்டுகள்

2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, 98.21% 2000 நோட்டுகள் ஆர்பிஐக்கு திரும்பி வரப்பெற்றன என அறிவிக்கப்பட்டது. அதாவது 6,366 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற இருப்பதாக தகவல்கள் வெளியானதும் மக்கள் அதிர்ச்சிக்குளாகினர். ஆனால் மத்திய அரசின் விளக்கம் மக்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது.

500 Rupees Notes: சந்திரபாபு நாயுடு வைத்த கோரிக்கை 

சமீபத்தில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அதிக மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதன்மூலம், ஊழலைக் கட்டுப்படுத்தவும், நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வழிவகை செய்யலாம் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | RBI அளித்த குட் நியூஸ், ரெப்போ ரேட் குறைந்தது: கடன் EMI குறையும்

மேலும் படிக்க | லக்கி பாஸ்கர் படப் பாணியில் ரூ.4.58 கோடி மோசடி: கைவரிசை காட்டிய பெண் அதிகாரி

மேலும் படிக்க | தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News