Kedarnath Gaurikund Plane Crash: உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் கோவிலில் இருந்து குப்தகாசி பகுதிக்கு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kedarnath Plane Crash: மொத்தம் 7 பேர் உயிரிழப்பு
Aryan Aviation ஹெலிகாப்டர் கேதர்நாத் கோயிலின் அடிவாரத்தில் உள்ள கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து சோன்பிரயாக் என்ற இடத்திற்கு சென்றுள்ளது. வெறும் 10 நிமிட பயணம்தான். இந்த விபத்து குறித்து உத்தரகாண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் (UCADA) வெளியிட்ட அறிவிப்பில், "இன்று அதிகாலையில் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானி உடன் 7 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். பயணிகளில் 23 மாத குழந்தையும் அடக்கம். அதிகாலை 5.20 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இதில் இந்த 7 பேரும் உயிரிழந்தனர்" என உறுதிப்படுத்தப்பட்டது.
கேதார்நாத் கோயில் இருந்து ஹெலிகாப்டர் திரும்பிக் கொண்டிருந்தபோது, வானிலை மோசமடைந்துள்ளது. அப்போது, விமானி ஹெலிகாப்டரை பள்ளத்தாக்கை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த ராகுல் சௌபே கூறுகையில், "பயணத்தின் போது வானிலை மோசமாக மாறியது. விமானி ஹெலிகாப்டரை பள்ளத்தாக்கில் இருந்து வெளியே நகர்த்த முயன்றார். ஆனால் அது கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது. தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
Kedarnath Plane Crash: உயிரிழந்தவர்கள் யார் யார்?
உயிரிழந்த பயணிகளில் கேதார்நாத் கோயில் குழு ஊழியர் விக்ரம் ராவத் என்பவரும் ஒருவர் என கர்வால் ஆணையர் வினய் சங்கர் பாண்டே தெரிவித்தார். இவர் உத்தரகண்ட் மாநிலம் உகிமத் பகுதியைச் சேர்ந்தவர். மகாராஷ்டிராவின் யவத்மாலைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சுரேஷ் ஜெய்ஸ்வால், ஷ்ரத்தா ஜெய்ஸ்வால் மற்றும் அவர்களின் 23 மாத மகளான காஷி ராஜ்குமார் ஜெய்ஸ்வால் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வினோத் தேவி (66), திரிஷ்டி சிங் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஜெய்ப்பூரைச் சேர்ந்த 39 வயதான விமானி கேப்டன் ராஜ்பீர் சிங் சவுகானும் (39) விபத்தில் உயிரிழந்தார்.
Kedarnath Plane Crash: மீட்புப்பணிகள் நிறைவு
அங்கு கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வந்தபோது உள்ளூர்வாசிகள் ஹெலிகாப்டர் விபத்தை பார்த்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கௌரிகுண்ட் பகுதிக்கு காலை 7 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், மாநில பேரிடர் மீட்புக்கு்ழுவும் விரைந்தன. அவர்கள் அங்கிருந்து மலையேறி காலை 8:55 மணிக்கு மீட்புப்பணியை தொடங்கினார், அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன. உடல்கள் அடையாளம் காண்பது கடினம் என்பதால் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன்பின் உடல்கள் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என ஐஜி ராஜிவ் ஸ்வரூப் தெரிவித்தார்.
மாநிலத்தில் ஹெலிகாப்டர் சேவை குறித்த நிலையான இயக்க நடைமுறை குறித்த ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைக்க உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாநில தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணை நடத்தும்.
Kedarnath Plane Crash: 6 வாரங்களில் 5வது விபத்து
கடந்த மே 2ஆம் தேதி முதல் கேதார்நாத் கோயில் பக்தர்களுக்கு திறக்கப்பட்டது. அப்போது முதல் பார்த்தோமானால், இது ஐந்தாவது விபத்து ஆகும். மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, ஜூன் 7 ஆம் தேதி, கேதார்நாத்துக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் புறப்படும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் உத்தரகண்டில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. அது கட்டடங்களுக்கு அருகில் ஆபத்தான முறையில் தரையிறங்கியது. அதில் 5 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமானிக்கு மட்டும் கொஞ்சம் லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க | NEET Topper List 2025: நீட் தேர்வில் டாப் 10 ரேங்க் பெற்றவர்கள்! முழு பட்டியல்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









