Pahalgam News in Tamil: பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று (ஏப். 28) விரிவாக எடுத்துரைத்தார்.
Pahalgam News in Tamil: 40 நிமிட சந்திப்பு
டெல்லியில் இன்று நடந்த இந்த முக்கிய சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது. பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயங்கரவாதிகளின் வீடுகள், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களின் வீடுகளில் இந்திய படைகள் தொடர் சோதனையிட்டு வருகின்றன.
Pahalgam News in Tamil: முப்படை தலைவருடனும் ஆலோசனை
பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு முன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதி அனில் சவுகானிடம் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில், அனில் சவுகான் பகல்காமின் கள நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தானை எதிர்கொள்ள ராணுவத்தால் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளைப் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Pahalgam News in Tamil: பாகிஸ்தானின் அத்துமீறல்
பகல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்கள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைபோல், பாகிஸ்தான் தொடர்ந்து நான்காவது முறையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இந்திய ராணுவம் அளித்துள்ள அறிக்கை ஒன்றில், ஏப்ரல் 27-28 இரவு, குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதியில் சிறிய ஆயுதத் தாக்குதல்களை மேற்கொண்டன என்றும் அதற்கு தகுதந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எல்லை தாண்டிய தொடர்புகள் இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டுகிறது. இதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுப்பார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Pahalgam News in Tamil: பிரதமர் காட்டம்
முன்னதாக, நேற்று 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"பகல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கும், இந்த சதித்திட்டத்தை தீட்டியவர்களுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் 140 கோடி இந்தியர்களுடன் உலகமே துணை நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும், நீதி நிலைநாட்டப்படும். இதை நான் மீண்டும் உறுதியளிக்கிறேன்.
காஷ்மீர் மற்றும் நாட்டின் எதிரிகள் இப்பகுதியின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு, அதனை தடுக்கும் வகையில் செய்த தீவிர முயற்சிதான் இது. பகல்காமில் நடந்த தாக்குதல், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களின் விரக்தியைப் பிரதிபலிக்கிறது. காஷ்மீரில் அமைதி திரும்பும் நேரத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் துடிப்பு மேலெழுந்து வந்தது, ஜனநாயகம் வலுப்பெற்று வந்தது, சுற்றுலா துறையும் எழுச்சி ஏற்பட்டது, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த முன்னேற்றத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் எதிரிகள் இதை விரும்பவில்லை. பயங்கரவாதிகள் காஷ்மீரை மீண்டும் அழிக்க விரும்புகிறார்கள்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவில் ரத்த ஆறு ஓடும்.. சீண்டும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









