PM Modi - Donald Trump: பிரதமர் மோடி தனக்கு எப்போதுமே நண்பர் தான் என டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில், அதற்கு உடனே மோடி போட்ட பதிலை இங்கு பார்க்கலாம்.

PM Modi - Donald Trump: இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான உறவு கடந்த சில மாதங்களாகவே சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருவதை எதிர்க்கும் வகையில், இந்திய பொருள்களின் மீது 50% வரி விதித்திருக்கிறது அமெரிக்கா.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் நிறுத்துவதை நிறுத்தினால் வரி விதிப்பு வாபஸ் வாங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் பேசியிருந்தார். இருப்பினும் அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை நியாயமற்ற செயல் என இந்தியா விமர்சித்தது. அதுமட்டுமின்றி, முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் காலகட்டத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்தியதில் முதன்மையான பங்கு தனக்கே இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறிவந்த நிலையில், இந்தியா தை முற்றிலும் மறுத்தது.
தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வந்த நிலையில், கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்று அங்கு நடந்த ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். மூன்று தலைவர்களும் கைக்குழுக்கி கொண்டு, ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொள்வது, சிரித்துக்கொண்டிருக்கும் வீடியோக்களும் வலம் வந்தன. ஜி ஜின்பிங், புதின் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பிரதமர் மோடியே சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்நது பிரதமர் மோடி இந்தியாவையும், ரஷ்யாவையும் நாம் சீனாவிடம் இழந்துவிட்டோம் என டொனால்ட் டிரம்ப் நேற்று பதிவிட்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களிலேயே இந்தியாவை இழந்துவிட்டோம் என நம்பவில்லை என்றும் தொடர்ந்து விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் ஊடகத்திடம் பேசியபோது, "இந்தியாவை இழந்துவிட்டோம் என நான் நினைக்கவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது ஏமாற்றம் அளிக்கிறது. அதை அவர்களுக்கு தெரியவைக்க வேண்டும் என நினைத்தேன். இந்தியா மீது பெரியளவிற்கு வரி விதித்துள்ளோம், 50 சதவீதம், மிக அதிக வரி. மோடியுடன் நான் நல்ல இணக்கமாக இருந்திருக்கிறேன், உங்கள் அனைவருக்கும் அது தெரிந்திருக்கும். இங்கு ஓரிரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தார், குறிப்பாக அவர் ரோஸ் கார்டன் வந்து, செய்தியாளர்களையும் சந்தித்திருந்தார்" என்றார்.
மேலும் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது, "மோடியுடன் நான் எப்போதுமே நண்பராக இருப்பேன், அவர் சிறந்த பிரதமர். இந்தியாவும், அமெரிக்காவும் சிறப்பான உறவை கொண்டிருக்கிறது, அதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை" என்றார். இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பேச்சுக்கு இன்று (செப். 6) பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி போட்டுள்ள X பதிவில், "(டொனால்ட் டிரம்ப் கருத்தை) வெகுவாக பாராட்டுகிறேன். டொனால்ட் டிரம்பின் உணர்வுகளை முழுமையாக ஏற்கிறேன். ஜனாதிபதி டிரம்பின் உணர்வுகளையும், நமது உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் முழுமையாகப் பிரதிபலிக்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாளியாக உள்ளன" என பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ