Pahalgam News In Tamil: பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், நேற்று (ஏப். 29) மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையில் முக்கிய கூட்டம் நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (National Security Advisor Ajit Doval), முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான் உள்ளிட்டோரிடம் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதத்திற்கு கடுமையான பதிலடி கொடுப்பதே நமது தேசிய உறுதிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி இக்கூட்டத்தில் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
பிரதமர் உறுதி
நாட்டின் ஆயுதப் படைகளின் அசாத்தியமான திறன்கள் மீது முழு நம்பிக்கையையும், உறுதியையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். மேலும் பதிலடி கொடுக்கும் முறை, இலக்குகள் மற்றும் அந்த நேரத்தை முடிவு செய்ய முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முப்படை தளபதிகளுடன் ஆலோசனை
ராஜ்நாத் சிங் (Defense Minister Rajnath Singh), அஜித் தோவல், அனில் சௌகான் மட்டுமின்றி இந்திய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி அமர் பிரீத் சிங் உள்ளிட்டோரும் பிரதமர் மோடி தலைமையிலான நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
#WATCH | PM Narendra Modi chairs a meeting with Defence Minister Rajnath Singh, NSA Ajit Doval, CDS and chiefs of all the Armed Forces. pic.twitter.com/Wf00S8YVQO
— ANI (@ANI) April 29, 2025
பகல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று முன்தினம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், முப்படை தலைமை தளபதி அனில் சௌகான் (Chief of Defence Staff Gen Anil Chauhan) விரிவாக எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து, சுமார் 40 நிமிடங்கள் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் இடையேவும் நேற்று முன்தினம் (ஏப். 28) தனிப்பட்ட சந்திப்பு நிகழ்ந்தது. இதை தொடர்ந்தே நேற்று மாலை முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி
பகல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடியை கொடுப்போம் என பிரதமர் மோடி பகல்காம் சம்பவத்திற்கு பின்னர் பல்வேறு தருணங்களில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பகல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய பயங்கரவாதிகள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என இந்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது.
பகல்காம் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருப்பதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டும் வேளையில், பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதேநேரத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அதற்கும் தக்க பதிலடி கொடுக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்து வருகிறது.
(ANI Inputs)
மேலும் படிக்க | Pahalgam News: காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடல்... அரசு அதிரடி - முழு பின்னணி
மேலும் படிக்க | பகல்காம் தாக்குதல்: பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்ட குடும்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









