Vantara World Class Wildlife Rescue: "வன்தாரா" வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் "வன்தாரா" என்ற பெயரில் வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தில் வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமான வந்தாராவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். வன்தாராவில் 2,000க்கும் மேற்பட்ட உயிரினங்களும், மீட்கப்பட்ட, அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளும் உள்ளன. வன்தாரா மையத்தில் உள்ள பல்வேறு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார். அங்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான விலங்குகளுடன் அவர் நெருக்கமாகப் பழகினார்.
வன்தாராவில் உள்ள வனவிலங்கு மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர், எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், ஐசியூக்கள் உள்ளிட்ட கால்நடை மருத்துவமனைகளையும் பார்வையிட்டார், மேலும் வனவிலங்கு மயக்க மருந்து, இருதயவியல், சிறுநீரகவியல், எண்டோஸ்கோபி, பல் மருத்துவம் மற்றும் உள் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளையும் பார்வையிட்டார்.
இங்கு, ஆசிய சிங்கக் குட்டிகள், வெள்ளை சிங்கக் குட்டி, சிறுத்தை குட்டி (அரிதான மற்றும் அழிந்து வரும் இனம்) மற்றும் ஒரு கேரகல் குட்டி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுடன் விளையாடி உணவளித்தார்.
இந்தியாவில் ஒரு காலத்தில் ஏராளமாக இருந்த கேரகல்கள், தற்போது அரிதானதாக மாறி வருகின்றன. வன்தாராவில் கேரகல்கள் இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ், அவற்றின் பாதுகாப்பிற்காக சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு, பின்னர் காட்டுக்குள் விடப்படுகின்றன.
மருத்துவமனையின் எம்.ஆர்.ஐ அறைக்குச் சென்ற பிரதமர், ஒரு ஆசிய சிங்கத்திற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதைக் கண்டார். நெடுஞ்சாலையில் ஒரு காரில் மோதிய பின்னர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மீட்கப்பட்ட சிறுத்தை மற்றும் அறுவை சிகிச்சை அரங்கையும் அவர் பார்வையிட்டார்.
வன்தாரா மையத்தில் மீட்கப்பட்ட விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தை நெருக்கமாக பிரதிபலிக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய பாதுகாப்பு முயற்சிகளில் ஆசிய சிங்கம், பனிச்சிறுத்தை மற்றும் ஒரு கொம்பு காண்டாமிருகம் ஆகியவை அடங்கும்.
Watch: Prime Minister Narendra Modi inaugurated and visited Vantara, a wildlife rescue and conservation center in Gujarat, home to over 1.5 lakh rescued animals. He explored its advanced veterinary facilities, interacted with rare species, witnessed surgeries, and participated in… pic.twitter.com/XV5j8mELaz
— IANS (@ians_india) March 4, 2025
பெரிய மலைப்பாம்பு, ஒரு தனித்துவமான இரண்டு தலை பாம்பு, இரண்டு தலை ஆமை, ஒரு டாபிர், சிறுத்தை குட்டிகள் ஒரு ராட்சத நீர்நாய், ஒரு போங்கோ (மான்) மற்றும் சீல்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார். உலகின் மிகப்பெரிய யானை மருத்துவமனையான யானை மருத்துவமனையின் செயல்பாடுகளையும் அவர் கண்டார். மேலும் மையத்தில் பல்வேறு வசதிகளை நிர்வகிக்கும் மருத்துவர்கள், துணை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுடனும் கலந்துரையாடினார்.
வன்தாரா மையம், ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு மைய வளாகத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 43 வகை உயிரினங்களில், 2 ஆயிரம் வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. வன்தாரா மையத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் ஆனந்த் அம்பானி ஏற்படுத்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









