'ஓய்வை அறிவிக்கிறார் பிரதமர் மோடி' - ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்ற பின்னணி இதுதானா...?

PM Narendra Modi: பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே நேற்று நாக்பூர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றதாக உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 31, 2025, 03:34 PM IST
  • பிரதமர் மோடி நேற்று நாக்பூர் சென்றார்.
  • அங்கு ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கும் சென்றார்.
  • ஆர்எஸ்எஸ் தலைமையகம் செல்லும் 2வது பிரதமர், மோடி ஆவார்.
'ஓய்வை அறிவிக்கிறார் பிரதமர் மோடி' - ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்ற பின்னணி இதுதானா...?

PM Narendra Modi: பிரதமர் நரேந்திரா மோடி நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகருக்கு வருகைந் தந்தார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கும் வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் தனது ஓய்வை அறிவிக்கவே வந்ததாக பரபரப்பு கருத்து ஒன்றை உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

சஞ்சய் ராவத் பேசியது என்ன? 

தலைநகர் மும்பையில் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவரது ஓய்வு குறித்து அறிவிக்கவே சென்றார். என்னுடைய நினைவின்படி, கடந்த 10-11 ஆண்டுகளில் அவர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றதே இல்லை. ஆர்எஸ்எஸ் தலைமையை மாற்ற நினைக்கிறது. பிரதமர் மோடி தற்போது தலைமை விட்டுச் செல்கிறார். நரேந்திர மோடிக்கு பின் யார் பிரதமராவார் என்பதை ஆர்எஸ்எஸ்  முடிவு செய்யும். ஆர்எஸ்எஸ் தேர்வு செய்யும் நபர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருப்பார். அதனால்தான் பிரதமர் மோடி நாக்பூருக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரகசிய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது" என பேசினார்.

ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஹூசைந் தல்வாய், சஞ்சய் ராவத்தின் கருத்துடன் உடன்படுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"அவர் சொன்னது சரியென்றே நான் நினைக்கிறேன். அவர்கள் 75 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வு அளித்துவிடுவார்கள். பிரதமர் மோடியும் வயதாகிவிட்டார், அதனால் இப்போது ஓய்வு பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம். அவர்களை மகிழ்விக்க அவர் அங்கு சென்றிருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை உருவாக்கியது" என்றார்.

இரண்டாவது பிரதமர் மோடி...

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு பதவியில் இருக்கும்போது வருகை தரும் இரண்டாவது பிரதமர், நரேந்திர மோடி ஆவார். அதாவது கடந்த 2000ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் மோடி இந்த வருகையின்போது மாதவ் நேத்ராலயா பிரீமியம் சென்டருக்கு அடிக்கல் நாட்டினார். இது  மாதவ் நேத்ராலயா கண் நிறுவனம் மற்றும் ஆய்வு மையத்தின் புதிய கட்டடம் ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த நிறுவனம் மறைந்த முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ் ராவ் கோல்வால்கரின் நினைவாக பெயரிடப்பட்டதாகும்.

தந்தை இருக்கும் போது...

சஞ்சய் ராவத்தின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசி உள்ளார். இதுகுறித்து அவர்,"பிரதமர் மோடிக்கு அடுத்த வாரிசைத் தேட வேண்டிய அவசியமில்லை. அவர் எங்கள் தலைவர், அவர் தொடர்ந்து ஆட்சியில் இருப்பார். 2029ஆம் ஆண்டில் மோடியை மீண்டும் பிரதமராகப் பார்ப்போம். நமது கலாச்சாரத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது, ​​வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. அதைப் பற்றி விவாதிக்க இன்னும் நேரம் வரவில்லை. அப்படி செய்வது முகலாய கலாச்சாரம்" என சாடினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News