PM Surya Ghar Free Electricity Scheme: மாதா மாதம் வரும் மின் கட்டணத்தால் உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படுகிறதா? கரண்ட் பில் கட்டியே கஜானா காலியாகும் நிலையில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிக மின் கட்டணம் செலுத்தும் நபர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே இது உபயோகமான தகவல்தான். உயர் மின் கட்டணத்திலிருந்து விடுபட மத்திய அரசு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிரதம மந்திரி சூர்ய கர் யோஜனா
அதிக மின்சார கட்டணத்திலிருந்து விடுபட எந்த அரசாங்க மானியத்திற்கும் காத்திருக்க வேண்டியதில்லை, எந்த நிறுவனத்திடமிருந்தும் எந்த தள்ளுபடியையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒரு முறை சோலார் பேனலை நிறுவிவிட்டால் போதும், அதிர்ச்சி அளிக்கும் மின்சார கட்டணம் பற்றிய கவலையை விட்டுவிடலாம். மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் இலவச மின்சாரத் திட்டம் நாடு முழுவதும் சூப்பர் ஹிட் திட்டமாக பிரபலமாகி வருகிறது. இதுவரை, PMSGMBY திட்டத்தின் கீழ் 16.78 லட்சம் மக்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.
அரசு வழங்கும் மானியம்
மத்திய மாநில அரசுகள் மானியங்களை வழங்குகின்றன
- இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியமும் கிடைக்கும்.
- மத்திய அரசு 3 கிலோவாட் வரை ரூ.78000 வரை மானியம் வழங்குகிறது.
- இது மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் தங்கள் மட்டத்தில் தள்ளுபடிகளை வழங்குகின்றன.
- பிரதம மந்திரி சூர்யா கர் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் ரூ.9000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
PM Suryaghar Free Electricity Scheme
பிரதமர் சூர்யாகர் இலவச மின்சாரத் திட்ட விவரங்கள்
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), நாடு முழுவதும் பிப்ரவரி 2024 முதல் பிரதமர் சூர்யாகர் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
- இந்தத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டுக்குள் குடியிருப்புத் துறையில் ஒரு கோடி வீடுகளின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM Surya Ghar Yojana: மாநிலங்களவையில் கிடைத்த அப்டேட்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சாரத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், இது குறித்து மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார். 'இந்தத் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 5, 2025 வரை மொத்தம் 16.78 லட்சம் குடும்பங்கள் ரூஃப்-டாப் மின் நிலையங்களின் பயனைப் பெற்றுள்ளன. மத்திய நிதி உதவியாக (CFA) பயனாளிகளுக்கு ரூ.9,280.88 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.' என்று அவர் கூறினார்.
PMSGMBY: மத்திய அரசிடமிருந்து எவ்வளவு மானியம் கிடைக்கிறது?
- பிரதான் மந்திரி சூர்யாகர் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ், மத்திய அரசால் அதிகபட்சமாக ரூ.78000 மானியம் வழங்கப்படுகிறது.
- 1 கிலோவாட் சோலார் பேனலை நிறுவினால், உங்களுக்கு ரூ.30,000 மானியம் கிடைக்கும்.
- 2 கிலோவாட் சோலார் பேனலுக்கு ரூ.60,000 மானியம் கிடைக்கும்.
- 3 கிலோவாட் சோலார் பேனலுக்கு ரூ.78,000 மானியம் கிடைக்கும்.
- 3 கிலோவாட் சோலார் பேனலில் இருந்து 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாகப் பெறலாம்.
மாநில அரசுகள் வழங்கும் மானியம்
- மத்திய அரசைத் தவிர, மாநில அளவிலும் மானியம் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் பிரதமர் சூரிய கர் யோஜனா திட்டத்துடன் கூடுதலாக, முதலமைச்சரின் சோலார் ரூஃப்டாப் மூலதன ஊக்கத் திட்டம், ஆன்-கிரிட் குடியிருப்பு சூரிய மின்சக்திக்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ. 20,000 மூலதன மானியத்தை வழங்குகிறது.
- டெல்லியில், ரூ.30,000 கூடுதலாக மானியம் பெறலாம்.
- இதேபோல், பீகாரில், வறுமைக் கோட்டு குடும்பங்களுக்கு அரசாங்கம் இலவசமாக சோலார் பேனல்களை வழங்குகிறது.
- சத்தீஸ்கரிலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.1.07 லட்சம் மானியம் வழங்குகின்றன.
- இன்னும் பல மாநிலங்களிலும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
மேலும் படிக்க | வாழ்க்கைச் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









