)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா முழுவதும் காவல்துறையால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. காவல்துறை தங்களிடம் இருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளா உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் நள்ளிரவில் யாருடைய வீட்டுக் கதவையும் தட்டுவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காவல் துறையினர் போக்சோ வழக்கை பதிவு செய்தனர். பிறகு நீதிமன்ற விசாரணையில் பிரசாந்த் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நள்ளிரவு 1:30 மணியளவில் காவல்துறையினர் பிரசாந்தின் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் காவல் துறையினர் கதவை தட்டியதால் பிரசாந்த் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் பிரசாந்த் மீது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பிரசாந்த் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் மனதில் என் மீது பதியப்பட்ட கோக்சோ வழக்கை உயர் நீதிமன்றம் தான் ரத்து செய்தது. என் மீது பொய்யான வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் மீது நான் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். இதனால் கோபம் அடைந்த காவல்துறையினர் நள்ளிரவில் என் வீட்டு கதவை தட்டினர், நான் திறக்காததால் தற்போது என் மீது போலியான வழக்கை பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை கோயிலாக மதிக்கின்றனர். குற்ற வழக்கில் உள்ளவர்களை கண்காணிப்பதாக கூறி யாருடைய வீட்டுக் கதவையும் நள்ளிரவில் தட்ட கூடாது. அதற்கு காவல்துறைக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. அனைவரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ