ஜம்மு காஷ்மீரில் தடையை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் சமூக விரோதிகள் வதந்திகள் பரப்பி போராட்டத்தை தூண்டுவதோடு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்து யூனியன் பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டது. 


இந்நிலையில் இந்த தடைகளை மீறி விபிஎன் (Virtual Private Networks )  மூலமாக  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்கள் சிலர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். அரசின் உத்தரவை மீறியதாகவும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறி ஜம்மு காஷ்மீர் சைபர் பிரிவு போலீசார் இந்த  நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 


தொடர்ந்து தவறான கருத்துக்களை சமூகவிரோதிகள் பரப்பி வந்ததால், சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.